பண சிக்கல் தீர குருபகவானுக்கு வியாழக்கிழமை விரதமிருப்பது எப்படி?

Update: 2022-08-18 01:52 GMT

கோள்களில் சிறப்பு மிக்க கோளாக கருதப்படுவது குருவாகும். குரு பார்க்க கோடி நன்மை பிறக்கும் என்பது பழமொழி. அப்பேற்பட்ட குருபகவானின் அருளை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

யாரொருவருக்கு குருவில் பலம் அதிகமாக இருக்கிறதோ அவருக்கு வாழ்வில் எல்லாமே வெற்றிதான் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவரின் அருளை பெற வேண்டுமெனில் அவருக்கு உகுந்த நாளான வியாழக்கிழமையில் அவரை வழிபடுவது சிறப்பானதாக இருக்கும். வியாழக்கிழமைகளில் அதிகாலை பிரம்மமூகூர்த்தத்தில் எழுந்து குளித்து நீராடி விஷ்ணு பரமாத்மாவிற்கு விளக்கேற்றுவது உகந்ததாகும்.

சிவப்பு நிற திலகமிட்டு, மஞ்சள் நிறத்திலான ஆடைகளை வியாழக்கிழமையில் தானமளித்து வர நல்ல அதிர்ஷ்டங்களும், ஆற்றலும் நம்மை வந்து சேரும். மேலும் மஞ்சள் நிறத்திலான இனிப்பு வகைகளை இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்குவது சிறப்பாகும். மேலும் வியாழக்கிழமையில் வாழைமரத்திற்கு வழிபாடு செய்வது குருவின் அருளை பெற உதவும் ஒரு வழியாக கருதப்படுகிறது.

மகிழ்ச்சியான செய்திகள் நம் காதுகளை எட்ட மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாமந்தி போன்ற மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம். முடிந்த அளவு வியாழக்கிழமை விரதமிருங்கள், அன்றைய நாளின் விரத உணவில் முடிந்தவரை உப்பினை தவிர்ப்பது நல்லது. ஒரு வேளை நீங்கள் விரதம் இருப்பதில்லை என்றாலும் உப்பை தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலும் இந்த நாளில் விரதமிருந்து, வழிபாட்டின் போதும், தானத்தின் போதும் மஞ்சள் நிறத்திற்கு முக்கியத்துவம் அளித்து பூஜைகள் செய்வது நல்ல பலனை கொடுக்கும். இந்த நாளின் பூஜையின் போது ' ஓம் நமோ நாராயணா' எனும் மந்திரத்தை சொல்வது மிகவும் உகந்ததாகும்.

இவ்வாறு செய்து குருவின் அருளை பெறுவதால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நிகழும். மேலும் இது விஷ்ணு தொடர்புடைய பூஜை என்பதால் லட்சுமி தேவியின் அருளையும் ஒருவர் பெற முடியும். இதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் ஏதுமிருப்பின் அதிலிருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமை விரதத்தின் மூலம் குரு பகவானின் அன்பிற்கு பாத்திரமாகி பண வரவு மட்டுமின்றி, நல்ல ஆரோக்கியம், மன மைதி போன்ற சகல செளபாக்கியங்களையும் ஒருவர் பெற முடியும்.

Similar News