இந்து மரபில் வேத சாஸ்திரத்தின் படி ஜாதகத்தில் இரண்டு கோள்கள் முக்கியமானவை. ஒன்று ராகு மற்றொன்று கேது. ஒவ்வொரு கோள்களுக்கும் ஒவ்வொரு தேவர்கள் அதிபதியாக இருக்கின்றனர்.
ஒவ்வொருக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. அவர்கள் குடிக்கொண்டுள்ள கோவில்களுக்கென்று சிறப்பம்சம் உண்டு. அந்த வகையில் இந்து கோவில்களில் முக்கியமானது கேது ஸ்தலம் என அழைக்கப்படும் நாகநாத சுவாமி கோவில். இந்த கோவில் பூம்புகாரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி, கீழபெரும்பள்ளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவில் கேதுவுக்கென பிரசித்தி பெற்றது. ஆனால் இங்கே மூலவராக அமர்ந்திருப்பவர் சிவபெருமான் ஆவார். அவரே நாகநாத சுவாமி எனவும் அழைக்கப்படுகிறார்.
கீழபெரும்பள்ளம் எனும் கோவில் நவகிரக கோவில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. காவேரி கரையோரம் அமைந்திருக்கும் இந்த கோவில் கேதுவுக்கென அர்பணிக்கப்பட்டது. தமிழகத்தில் அமைந்திருக்கும் ஏராளமான கோவில்களுள் இந்த கோவில் மிகவும் தனித்துவமானது. சர்ப தோஷம் என்று ஜோதிடத்தில் தெரிந்துவிட்டாலே இங்கே படையெடுக்கும் மக்கள் ஏராளம்.
சர்ப தோசத்திற்கு பரிகாரமாக இங்கே இருக்கும் சிவபெருமானுக்கு பாலை அர்பணித்து வணங்குகின்றனர். அந்த வழக்கத்திற்கு ருத்ராபிஷேகம் என பெயர் .
இதிலிருக்கும் விஷேசம் என்னவெனில், இங்கே பகவானுக்கு அர்பணிக்கப்படும் பால் நீல நிறமாக மாறிவிடுகிறது. இந்த அதிசயத்திற்கான காரணம் இன்றும் புலப்படவில்லை. பால் நீல நிறமாக மாறுவது, பெருமான் தோஷம் குறித்த நம் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார் என்பதை குறிப்பதாக நம்பப்படுகிறது.