சிவன் அனுப்பிய தங்க மீனை அவருக்கே கொடுத்து அதிபத்தநாயனார் .

அதிபத்த நாயனாரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் தங்கத்தாலான மீன் ஒன்று அவரது வலையில் சிக்க வைத்தார். அதை சிவனுக்கே அர்ப்பணித்தார் அதிபத்தநாயனார்.

Update: 2022-08-23 03:30 GMT

நாகப்பட்டினம், நீலாயதாட்சி அம்மன் கோவில் 64 சக்தி பீடங்களில் ஒன்று அழகிய நீல நிற கண்களை உடையவள் என்பதால் கருந்தடங்கண்ணி என அழைக்கப்படுகிறது.புண்டரீக முனிவர் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்த லிங்கத்தை சாலிக மன்னரால் திருப்பணிகள் செய்யப்பட்டது.

அதேபோல் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பல்லவ மன்னர்கள் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு கி.பி பத்தாம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த பிற்கால சோழர்கள் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த விஜயநகர மன்னர்கள் நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு திருப்பணி செய்தனர்.

கிபி 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் நீலயதாட்சி அம்மனுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இவ்வாறு சிறப்பு பெற்ற நீலயதாட்சி அம்மனை 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் வழிபட்டார்.

நாகப்பட்டினம் நம்பியார் நகரில் மீனவர் குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது எல்லாம் காயாரோகணேஸ்வரர் மீது கொண்ட அன்பால் தனது வலையில் சிக்கும் மீன்களில் ஒன்றை இறைவனை அடைந்திடுக எனக்கூறி கடலில் விடுவார். அதிபத்த நாயனாரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் தங்கத்தாலான மீன் ஒன்றே அவரது வலையில் சிக்க வைத்தார்.


அந்த தங்க மீனை தயங்காமல் கடலில் விட்டு தனது பக்தியை காட்டினார். இவ்வாறு சிவபெருமான் மீது பக்தி கொண்ட அதிபத்த நாயனார் தனி சன்னதி நீலாயதாட்சி அம்மன் கோவிலில் அதிபத்த நாயனார் அம்மன் கோவிலில் அமர்ந்தார். நாயனார் பிறந்த மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் இன்றுவரை நாகப்பட்டினம் ஆவணி நம்பியார் நகர் கடற்கரையில் தங்கமீன் விடும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாகப்பட்டினம் நம்பியார் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நம்பியார் நகர் கிராம சீர்வரிசை பெற்றுக்கொண்டே தங்கமீன் விடும் திருவிழா நடைபெறுகிறது.



 


Similar News