ஒர் உளவியல் பார்வை உங்களுக்கு ஒரு மணி நேரம் மகிழ்ச்சி வேண்டுமெனில், ஒரு குட்டி தூக்கம் போடுங்கள். ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமெனில் மீன்பிடிக்க செல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மகிழ்ச்சி வேண்டுமெனில் அதிர்ஷ்டத்தை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமெனில் யாருக்கேனும் உதவுங்கள். பல நூற்றாண்டுகாலமாக சிந்தனையாளர்கள் பலர் பரிந்துரைத்த மகிழ்ச்சிக்கான வழி பிறருக்கு உதவுவது.
காக்கைக்கு சோறிடுவது தொடங்கி ஒரு குழந்தை அதன் பிறந்தநாளுக்கான இனிப்பை பிறரோடு பகிர்வது போன்ற எல்லா சடங்குகளும், பழக்க வழக்கங்களும் பிறருக்கு கொடுப்பதை முன்னிலைப்படுத்தி நம் மனதில் பதியவைக்க பட்டவை தான்.
எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக அணுகும் அன்பர்கள் கூட இந்த உளவியலை உற்று நோக்கினால் இதன்ன் பின் இருக்கும் அறிவியல் உண்மையும் உரக்க சொல்வது பிறருக்கு உதவுங்கள் என்பதை தான். அறிவியல் ரீதியாக பார்த்தால் FMRI எனும் தொழில்நுட்பத்தின் மூலம் பிறருக்கு கொடுப்பதால் நம் மூளையிலிருக்கும் சில பகுதிகள் தூண்டப்படுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே பிறருக்கு கொடுப்பது என்பது வெறும் நிறைவு மாத்திரம் அல்ல, ஆரோக்யமான,செழிப்பான வளமான மற்றும் அர்தமுள்ள வாழ்வாக இருப்பதற்கான தீர்வு.
தன்னுடைய சிரமத்தையும் பொருட்படுத்தாது கொடுப்பவர்கள் ஏராளம் உண்டு. சிக்கல்களை எதிர்கொள்ளாமல், சிறப்பாய் கொடுத்துதவுதற்கான சில குறிப்புகள் இங்கே…
ஆத்மார்த்தமான அன்பை கொடுங்கள்
நம்முடைய ஆத்மார்தமான அன்பே கொடுப்பதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும். எவ்வளவு கொடுத்தோம் என்கிற அளவீட்டை காட்டிலும் கொடுக்கப்பட்டவையில் நம் அன்பு எப்படியானது என்பதை கருத்தில் கொள்வதும் அவசியம். எனவே இந்த விழிப்பும் தெளிவும், பிறருக்கு நன்மை பயக்கும் அதே வேளையில் நமக்கும் சேர்த்தே நன்மை