டாக்டர் பட்டம் பெறும் சிம்பு !

Update: 2022-01-08 17:04 GMT

நடிகர் சிலம்பரசனுக்கு சென்னையில் புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க இருக்கிறது.


தமிழ் சினிமாவில் நடிகர்  சிலம்பரசனுக்கு முக்கிய இடம் உண்டு. பல  சவால்களையும், பல சர்ச்சைகளை சந்தித்து சிலம்பரசன் அவர்கள் தன் திரை வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவரை சுற்றி சர்ச்சைகள் வளர்ந்து வந்தாலும் அவரது மார்க்கெட் தழைத்துதான் வருகிறது.


சமீபத்தில் வெங்கட்பிரபு  இயக்கத்தில்  திரையில் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்தது "மாநாடு". இத் திரைபடத்தில் சிம்பு தன் உடலை மெலிதாக்கி ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.  இந்த திரைப்படம் சிம்புவின் மார்க்கெட் தளத்தை புதுப்பித்ததாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்புவுக்கு   சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான " வெந்து தணிந்து காடு" படத்தின் மீது ரசிகர்களின்  எதிர்பார்ப்புகள் எகிறி வரும் நிலையில்,  சிம்பு டாக்டர் பட்டம் பெறபோகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News