சப்தகன்னியரில் வராஹியை வணங்குவதால் நிகழும் அதிசயங்கள்!வழிபடுவது எப்படி?

Update: 2022-02-13 00:30 GMT

தன்னை உணர்தல், முக்தியை நாடுதல் நம் ஆன்மீக மரபின் சாரம் என்றாலும். நம் மரபில் ஒவ்வொருவருக்குமான பிரத்யேக வழிபாடுகள் செய்வதுண்டு. அதில் ஒன்று தான் வராஹி வழிபாடு. வராஹி என்பவள் சப்த கன்னியரில் ஒருவராவார். சக்தி ரூபத்திலிருந்து தோன்றிய கன்னிகளாம் பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, நாராயணி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இந்த வரிசையில் ஐந்தமாவர் வராகி. விஷ்ணு பெருமானின் வராஹ அவதாரத்தின் அம்சமாவர் வராஹி. இவர், இந்த பிரபஞ்சத்தின் மூலமான ஆதி சக்தியாம் தேவி லலிதா திரிபுரசுந்தரியின் படை தலைவராவார். சப்த கன்னியரில் இவர் ஐந்தமாவர் என்பதாலேயே பஞ்சமி என்ற பெயரும் உண்டு. பஞ்சமியில் இவரை வணங்குவதன் தார்பரியமும் அதுவே. கைகளில் தண்டத்தை ஏந்தியிருப்பதால் தண்டினி என்ற பெயரும் உண்டு. எட்டு கரங்கள் கொண்டு அருள் பாலிக்கும் இவர் பின் கரங்களில் தண்டத்தையும் கலப்பையும் ஏந்தியுள்ளார்.


அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் அருளை ஒருவர் பரிபூரணமாக பெறுவதற்கு ஒருவர் வராஹியின் அருளை பெறுவது அவசியம். காரணம், அவரே அன்னையை காத்திடும் கன்னியாவார். சும்பன், நிசும்பன், பந்தசுரன், இரத்த பீஜன், போன்ற மிக கொடிய அரக்கர்களை அழித்த போரில் வராஹியின் வீரம் ஏராளமாக போற்றப்பட்டுள்ளது. வராஹியை வழிபடுவதற்கு மாலை நேரமே ஏற்றது. அவரை திருவுருவமாகவும் மற்றும் திருவுருவப்படமாகவும் வழிபடலாம். வடப்புறம் நோக்கி விளக்கேற்றி, உளுந்து, மாதுளை, பால் ஆகியவை அவர்குரிய நெய்வேத்யங்களாகும். அம்பிகையின் சொரூபம் ஆக்ரோஷம் நிறைந்தது எனினும், அன்பை பொழிவதிலும் நாடி வரும் பக்தருக்கு ஆதரவு வழங்குவதிலும் கருணை பொங்கும் அன்னையிவள்.

வழக்குகள் வென்றிட, பிரச்சனைகள் தீர்ந்திட, தீய சக்திகள் அல்லது தீய ஆற்றலின் பிடியில் இருந்து விடுபட வராஹி வழிபாடு உகந்ததாகும். அவர்குரிய மந்திரத்தை பஞ்சமி திதியில் அல்லது 48 நாள் அதாவது ஒரு மண்டல காலத்திற்கு பாராயணம் செய்து வர ஏராளமான நற்பலன்கள் கிட்டும் என்படு நம்பிக்கை. அம்பிகையை வணங்குவதால் செல்வம், கல்வி, வீரம், வெற்றி என அனைத்து விதமான நன்மையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

https://kathir.news/spirituality/why-and-how-to-do-varahi-worship-1353639

Similar News