நலங்களை அள்ளி தரும் நவராத்திரி பூஜையின் ஒன்பதாம் நாள். நம் நாட்டில் நவராத்திரியை பொருத்த மட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள்களும் துர்கையம்மனின் நவ அம்சங்கள் ஒவ்வொரு நாளும் வழிபடப்படுகின்றன.
துர்கை, பவானி, அம்பா, சந்திரிகா, கெளரி, பார்வதி, மஹிஷாசுரமர்த்தினி என அம்பிகை எடுக்கும் வடிவங்கள் ஏராளம் ஏராளம். பொதுவாக 9 நாட்கள் என்றாலும், சில இடங்களில் 8 ஆம் நாள் மற்றும் 10 ஆம் நாளில் முக்கிய வழிபாடுகள் செய்யப்படுவதுண்டு. நாட்டின் மிக நீண்ட கொண்டாட்டங்களுள் ஒன்றாக கருதப்படும் நவராத்திரி ஒன்பது நாட்களின் ராம நவமி நாளில் நிறைவு பெறுகிறது. இந்த இறுதி நாளில் சித்திதாத்ரி மற்றும் கன்னி பூஜை செய்யப்படுவது வழக்கம்.
இந்த நாளில் வீட்டிற்கு சின்னஞ்சிறிய பெண் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு உணவளித்து அவர்களின் அருளை பெரும் வழக்கத்தையும் ஒரு சில இடங்களில் கொண்டுள்ளனர். தேவி சித்திதாத்ரி குறித்து பல நாட்டுபுற கதைகள் சொல்லப்படுவதுண்டு. குறிப்பாக தன்னை வணங்குபவர்களுக்கு மன நிறைவையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்பத்திலிருந்து விடுதலையும் வழங்குவதாக்க நம்பப்படுகிறது .
இறுதி நாளில் வழங்கப்படும் சித் திதாத்ரிதேவியின் பெயருக்கான அர்த்தம். சித்தி என்றால் தியானப்பதிக்கற்கான தன்மை தாத்ரி என்றால் கொடுப்பவள் என்று பொருள். அன்னை தேவி சித்திதாத்ரி ரூபத்தில் தாமரை இலையின் மீது அமர்ந்து நான்கு கரங்கள் ஏந்தி அதில் தாமரை, சங்கு ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். இந்த நாளை மகாநவமி எனவும் கொண்டாடுவதுண்டு. இந்து புராணங்களின் படி சிவபெருமான் அவருடைய மகாசித்திகளையும் அன்னை சித்திதாத்ரி அருளால் பெற்றார் என்பது நம்பிக்கை. சிவனின் அனைத்து வெற்றி மற்றும் சகல அம்சங்களிலும் அம்பிகையின் இருப்பும் இருந்ததாலே அவர் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒன்பதாம் நாள் வழிபாட்டில் துர்க சப்தஸதியிலிருந்து மந்திரங்களை பாராயணம் செய்வது உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆஹூதிகள் வழங்குவதாக இருந்தால் 108 முறை "ஆவும் க்ரீம் க்லீம் சாமுண்டயே விசய் நமோ நமஹ" என்ற மந்திரத்தை சொல்லலாம்,
மற்றும் இந்த நாளில் செய்யப்படும் மற்றொரு முக்கியமான பூஜை கன்னியா பூஜை ஒன்பது கன்னிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களுக்கு உணவளித்து அவர்களின் ஆசியை பெறுவது. அன்னைக்கு உகந்த மலர் செண்பகம், இன்றைய நாளின் உகந்த நிறம் மயில் நீலம், சொல்ல உகந்த மந்திரம் "ஆவும் தேவி சித்திதாத்ரியை நமஹ "