100 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்! தங்கத்தில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்!
ஜனவரி 22ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு உலக நாடுகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று பல உற்சாகமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் பலர் ராமர் கோவிலுக்கு சில பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் அயோத்தி ராமர் கோவிலில் கட்டமைப்புகள் குறித்த சுவாரசியமான தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இதன்படி, தற்பொழுது அயோத்தி ராமர் கோவிலின் கருவறை சன்னதியில் தங்க கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ராமர் சிலை வைக்கப்பட உள்ள கருவறை சன்னதியில் 12 அடி உயரத்திலும் 8 அடி அகலத்திலும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், அயோத்தி ராமர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 46 கதவுகளில் 42 கதவுகள் 100 கிலோ எடை கொண்ட தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Source : Dinamalar & Thanthi TV