13 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிவலம்.. இந்து முன்னணியினரால் சாத்தியமானது எப்படி..

Update: 2023-11-28 01:07 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பழையம்பேட்டை ஈஸ்வரன் கோவிலில் 2003 ஆம் ஆண்டு முதல் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வந்தனர். 2010 ஆண்டு முதல் பல்வேறு காரணங்களுக்காக கிரிவலம் செல்வதை இந்து சமய அறநிலையத்துடன் தடுத்தது. குறிப்பாக கிரிவலம் செல்ல அங்கு சரியான பாதை கிடையாது, மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது, தெருவிளக்கு வசதி இல்லை, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது போன்ற பல்வேறு குறைகளை கூறி கிரிவலம் செல்வதற்கு தடை போட்டார்கள்.


இந்நிலையில் நேற்று முன்தினம் பௌர்ணமி நாளன்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கோபியின் முயற்சியின் பெயரில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பழைய பேட்டை சோமேஸ்வரர் கோவிலில் இருந்து பிறகு மலையை நோக்கி கிரிவலம் வந்தார்கள். அதன் பின்னர் அங்கு தீபம் ஏற்றப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் கிரிவலம் சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இனி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்வதற்கு இந்து முன்னணி சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றை முன்னிறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் மாதம்தோறும், பௌர்ணமி தினத்தன்று இந்து பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு ஏற்பாடு செய்வதற்காக உறுதி அளித்து இருக்கிறார்கள். எனவே இவர்களின் முயற்சியின் காரணமாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிவலம் தொடங்கி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News