மறுபிறவி இல்லாமல் நம்மை துன்பங்களில் இருந்து காக்க வணங்க வேண்டிய தெய்வம்!

திருப்புனவாசல் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

Update: 2023-10-22 13:15 GMT

தேவாரப் பாடல் பெற்ற 14  பாண்டி நாட்டு பதிகளுள்  ஒன்றாக விளங்குவது திருப்புனவாசல் விருத்தகாசி, பிரம்மாபுரம், இந்திரபுரம், சின்ன சிதம்பரம் என பெயர்கள் பல பெற்ற சிவாலயம். புதுக்கோட்டை மாவட்டத்தில் பாம்பாறு மற்றும் வங்கக்கடல் இடையே உள்ளது. சம்பந்தரும் சுந்தரரும் இந்த ஆலயத்திற்கு சொல் மாலை சூட்டி உள்ளார்கள். ஐந்துநிலை ராஜகோபுரத்தின் இருபுறமும் வீற்றிருக்கும் விநாயகரையும் முருகப்பெருமானையும் வணங்கிவிட்டு உள்ளே சென்றால் விசாலமான கோவிலின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.


கொடிமரத்தையும் நந்தியையும் வணங்கி முன்னேறும் போது கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை தரிசிக்கலாம். விருத்தபுரீஸ்வரர் என்றும் பழம்பதி நாதர் என தமிழிலும் பெயர் கொண்ட இத்தல ஈசன் 83 அடி சுற்றளவு உள்ள ஆவுடையார் மீது ஒன்பதே உயரம் உள்ள லிங்கத் திருமேனியில் தோன்றி பிரமிக்க வைக்கிறார் லிங்கத்துக்கு மூன்று முழம் ஆவுடையாருக்கு 30 முழம் என்ற முறையில் வஸ்திரம் சாத்துகிறார்கள். அகன்ற கருவறை விமானம் கலைநயத்தோடு 11 அடுக்குகளாக அமைக்கப்பட்டது. ராஜகோபரத்தை விட உயர்ந்து காணப்படுகிறது.


தஞ்சை பெரிய கோயில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், கோவில்களை போலவே இத்தல மூலவரின் விமானம் மேருவகை கட்டிடக்கலையால் பொலிவு நான்குகங்களும் நான்கு விநாயகர்கள் மேலும் இந்திரன் வழிபட்ட அகண்டல விநாயகர் என்று நாயகர்கள் இந்த ஆலயத்தில் இருப்பது தனி சிறப்பு கட்டிடக்கலையால் பொலிவுறுகிறது. நான்கு யுகங்களும் நான்கு விநாயகர்கள் மேலும் இந்திரன் வழிபட்ட ஆகண்டல விநாயகர் என்று ஐந்து விநாயகர்கள் இந்த ஆலயத்தில் இருப்பது தனி சிறப்பாகும் திருச்சுற்றில் யோக வியாக்கியான தக்ஷிணாமூர்த்தி நோக்கி தென்திசை நோக்கி வீற்றுள்ளார்.


சிவபக்தனான சுசிலன் அவனது மனைவி இருவரையும் எமதர்கள் கவர்ந்து சென்றபோது சிவகணங்கள் எமதுதர்களை தடுத்து கணவன் மனைவி இருவருக்கும் முக்கிய அளித்தன எனவே கோவிலில் அடிவயிற்றவர்களுக்கு மரண பயம் விலகும் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை காசியில் இருப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் அதுபோல திருப்புன வாயிலுக்கு வந்து வழிபடுபவருக்கெல்லாம் முக்தி நிச்சயம் என்பது விருத்தபுரி மகாத்மியம்.


கிழக்கு கடற்கரை சாலை வழியே பட்டுக்கோட்டையில் இருந்து செல்லும்போது மீமிசல் என்ற ஊர் வரும். அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் அரசன் கரை என்ற இடம் உள்ளது. அங்கிருந்து உள்ளே 5 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். அறந்தாங்கியில் இருந்து 42 கிலோமீட்டர், ஆவுடையார் கோவிலில் இருந்து 28 கிலோமீட்டர் திருவாடானையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு செல்ல அந்த ஊர்களில் இருந்து பேருந்து வசதி அஉள்ளது.

Similar News