தங்கத்தால் ஆன தேங்காய், குடம் இருக்கக்கூடிய முருகன் கோவில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலம் திருச்செந்தூர். இத்தலத்தின் சிறப்பு பற்றி காண்போம்.

Update: 2023-11-14 10:00 GMT

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குவது திருச்செந்தூர். இந்த கோவிலின் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லா சன்னதிகளுக்கும் நாம் சென்று வந்தால் 'ஓம்' என்ற எழுத்து வடிவில் அந்த பாதை அமைந்திருப்பதை அறிய முடியும். இந்த ஆலயத்தில் தங்க குடங்கள் இருப்பதாகவும் இவை வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர். தங்க தேங்காய்களும் இங்கு உண்டு.


இவை முக்கிய பிரமுகர்கள் வருகை பூரணகும்பம் மரியாதை மற்றும் வேள்வியின்போது பயன்படுத்தப்படுகிறதாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவார்கள். இந்த பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருக்கும். இவை முருகனின் 12 திருக்கரங்களை குறிப்பதாக ஐதீகம்.

Similar News