தந்தைக்கு இறுதி காரியம் செய்யத் தவறியவர்கள் வழிபட வேண்டிய தலம்

பித்ருக்களின் சாபம் போக்கும் புள்ளப்பூதங்குடி வல்வில் ராமர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் பத்தாவது திவ்ய தேசமாக விளங்குகிறது . தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Update: 2022-10-13 11:30 GMT

கோவில்களில் ராமர் பொதுவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். ஆனால்  புள்ள பூதங்குடி  வல்வில் ராமர் கோவிலில் ராமர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் ராமர் ஜடாயு பறவைக்கு ஈமக்கிரியை செய்து உள்ளார். கிழக்கு நோக்கி பங்கஜ சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். புதனுக்கு உரிய பரிகார தலமான இங்கு பித்ருக்களுக்கு பரிகாரம் செய்து வழிபடுவது சிறப்பானது ஆகும்.குறிப்பாக திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபாடு நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .


மேலும் பதவி உயர்வுக்காக பிரார்த்திப்பவர்கள் இந்த கோவிலில் உள்ள யோக நரசிம்மரை வழிபட்டால் பதிவு உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இறந்த தனது தந்தை தசரதனுக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாத நிலை இராம பிரானுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஜடாயுபுறவைக்கு ராமர் இறுதி காரியத்தை பூமாதேவியுடன் செய்து முடித்தார். எனவே சந்தர்ப்ப சூழ்நிலையால் தந்தைக்கு இறுதி காரியத்தை செய்ய முடியாதவர்கள் புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவிலுக்கு வந்து வழிபட்டால் தந்தைக்கு செய்ய தவறிய இறுதி காரியத்தை செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவில் தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த வைணவ தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

Similar News