22,000 ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஈசனுக்கு ஆடை அலங்காரம் செய்யப்படும் திருத்தலம்

ருத்ராட்சமே கவசமாகவும் ஆடை அலங்காரமாகவும் வீற்றிருக்கும் சிவன் இருக்கும் தலம் பற்றி காண்போம்.

Update: 2023-07-15 11:15 GMT

கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திலும் திருநாகேஸ்வரத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேப்பெருமாநல்லூர் என்ற ஊர். இங்கு விஸ்வநாத சாமி திருக்கோவில் இருக்கிறது . இத்தலம் மூலவருக்கு பிரதோஷம், சிவராத்திரி முதலான சிவனுக்கு உகந்த விசேஷ நாட்களில் 22,000 ருத்ராட்சம் அணிகளை கொண்டு ஆடை, பானம், நாக படம் அமைத்து கவசமிடுகிறார்கள்.


இந்த அலங்காரத்தில் விஸ்வநாத ஸ்வாமியை வழிபாடு செய்வதால் சிறப்புமிக்க பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். சூரிய பகவான் நாள் தவறாது தன்னுடைய கதிர்களால் வழிபடும் இறைவன் இந்த விஸ்வநாத சுவாமி ஆவார் . இத்தால இறைவனை வழிபாடு செய்தால் பிறவிப்பிணி அகலும் என்பது ஐதீகம்.


SOURCE:DAILY THANTHI

Similar News