மனித முகத்துடன் விநாயகர் இருக்கக்கூடிய திருத்தலம்!
மனித முகத்துடன் விநாயகர் அருள் பாலிக்கும் திருத்தலம் பற்றிய செய்தியைக் காண்போம்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது பேரளம். இங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது 'திலதர்ப்பணபுரி' என்று அழைக்கப்படும் சிதிலபதி. இங்கு முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பெயர் சொர்ணணவள்ளி என்பதாகும். தசரதருக்கும் ஜடாயுவுக்கும் இராமர் 'திலதர்ப்பணம்' செய்த தலமானதால் இந்த ஊர் 'திலதர்ப்பணபுரி' என்று அழைக்கப்படுகிறது . முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ப்பணம் முதலான புனித ஆகம பூஜைகள் செய்ய வேண்டிய புனித தலம் ஆகும். இவ்வாலயத்தில் விநாயகர் யானை முகம் இல்லாமல் மனித முகத்துடன் காணப்படுகிறார்.
இவரை ஆதி விநாயகர் என்றும் நர விநாயகர் என்றும் அழைக்கிறார்கள். சிவபெருமானுடன் ஏற்பட்ட போரில் விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதால் யானை தலை பொருத்தப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன . அந்த யானை தலை வருவதற்கு முன்பான விநாயகரின் உருவமே இது என்கிறார்கள். இந்த விநாயகரை வழிபாடு செய்தால் அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.