கிருஷ்ணருக்கு தாலாட்டு வைபவம் நடக்கும் கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணனுக்கு தாலாட்டு வைபவம் நடக்கும் கோவில் ஒன்று உள்ளது.

Update: 2023-09-04 16:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது வடசேரி. இதன் அருகே கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கிருஷ்ணன் கோவிலை அடிப்படையாக வைத்து தான் இந்த ஊரும் அதே பெயரில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. 13- ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்மன் என்ற மன்னனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.


இங்கு மூலவரான பாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்கிறார். இரு கரங்களிலும் வெண்ணையை ஏந்தி நிற்கும் இவரை இரவு நேர பூஜையின் போது வெள்ளித்தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக பாலகிருஷ்ணனுக்கு படைக்கப்பட்ட வெண்ணை மற்றும் நெய்வேத்திய பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தால இறைவனை தொடர்ச்சியாக மூன்று அஷ்டமி தினங்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாளில் வணங்கி வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



Similar News