மகாலட்சுமிக்கு தீபாவளி சீர் கொடுக்கும் வைபவம் நடைபெறும் ஆலயம்

திருநறையூர் சித்தநாதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து வருடா வருடம் மகாலட்சுமிக்கு தீபாவளி சீர் கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.

Update: 2023-11-11 07:00 GMT

காவிரி தென்கரையில் உள்ள 127 சிவ தலங்களில் 65 ஆவது தலம் திருநாரையூர் சித்தநாதீஸ்வரர் ஆலயம். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவாரூர் பாதையில் சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். நர நாராயணர் பட்சி ரூபமாக எழுந்தருளியதால் இந்த ஊருக்கு திருநாரையூர் என்றும் பெயர் உண்டு. காலப்போக்கில் இது திருநாரையூர் மற்றும் நாச்சியார்கோவில் என இரண்டு ஊர்களாக அறியப்படுகின்றன.


மேதாவி மகரிஷி கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் மகாலட்சுமியே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டு பெற்றாராம். அதன்படி மகாலட்சுமி இல்லத்தில் அவதரித்து குபேரனுக்கு அருள் புரிந்ததாக தலபுராணம் சொல்கிறது. ஒரு கட்டத்தில் தன் மகளுக்கு மனம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனிடம் மேதாவி மகரிஷி வேண்டினார். இதை ஏற்று ஸ்ரீ பார்வதி தேவி சமேதராக காட்சி தந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு மகாலட்சுமியை கன்னிகாதானம் செய்து வைத்தாராம் சிவபெருமான்.


இந்த தளத்தின் மற்றொரு சிறப்பு மகாலெட்சுமிக்கு வழங்கப்படும் தீபாவளி சீர் வைபவம். தீபாவளிக்கு முதல் நாள் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பட்டுப்புடவை, வேஷ்டி, துண்டு , பூமாலை,  பழங்கள் மற்றும் தாமரை மலர்கள் ஆகியவற்றை மேளதாளத்துடன் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்று தீபாவளி சீராக வழங்குவது வழக்கம். 

Similar News