நள்ளிரவில் வழிபாடு நடக்கும் கோவில்!
தஞ்சாவூர் மாவட்டம் பரக்கல கோட்டையில் நள்ளிரவில் வழிபாடு நடக்கும் சிவன் ஆலயம் உள்ளது. அதைப் பற்றி காண்போம்.
தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை கிராமத்தில் பொதுஆவுடையார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முன்னொரு காலத்தில் முனிவர்கள் தவம் புரிந்ததாக கூறப்படுகிறது. இங்கு வெள்ளாலமரம் தல விருட்சமாக இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் தவம் புரிந்த முனிவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பொதுவான தீர்ப்பு கொடுத்து சிவன் மரத்திலேயே ஐக்கியமானதாக தல புராணம் கூறுகிறது.
இதனாலேயே பொதுவுடையார் எனப்படுகிறார். பொது ஆவுடையார் கோவில் என்ற பெயரும் வந்தது. இந்த ஆலமரத்தைச் சுற்றி மதில் சுவர் எழுப்பி அதுவே கோவில் கருவறையாக விளங்குகிறது. இந்த கோவிலில் திங்கட்கிழமை தோறும் நள்ளிரவு 12 மணி அளவில் வழிபாடு நடைபெறும். மற்ற நாட்களில் கோவில் நடை திறக்கப்படுவதில்லை. தை முதல் நாள் பொங்கல் அன்று மட்டும் காலை முதல் மாலை வரை வழிபாடு நடைபெறும்.