கர்வத்தினால் தன் தவ வலிமையை இழந்த குருபகவான் மீண்டும் தவம் இயற்றி அனைத்து வலிமைகளையும் பெற்ற ஆடவல்லீஸ்வரர் ஆலயம் !

நவகிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் பிரகாஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் இந்திரன் லிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆசிரியராக விளங்குபவர் குருபகவான்.

Update: 2023-03-28 07:30 GMT

நவகிரகங்களில் சுபகிரகமாக திகழும் குரு பகவான் நான்கு வேதங்களிலும் புலமை மிக்கவர். ஒழுக்கத்தினாலும் கடும் தவம் வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியை கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தை சேர்ந்வரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர். முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம் குரு பகவனுக்கு சில வினாடிகள் ஏற்பட்டது.

தேவர்களே ஆனாலும் கர்வம் கூடாது என்பது தர்மம்.இதற்கு மாறாக மனம் மாசுபட குருபகவான் நடந்து கொண்டதனால் தன் தவ வலிமையையும் தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டது என்று எண்ணி மனம் வருந்திய தேவகுரு படைப்பு கடவுளான பிரம்ம தேவரை வணங்கி தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி வழி கூறுமாறு வேண்டினார் .

குருபகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்மதேவரும் மனமிறங்கி பூவுலகில் முன்னூற்று மங்களம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்த திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரர் பெருமானை குறித்து தவம் இயற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம் எனக்கூறி அருளினார். அதன்படி குருபகவான் ஆடவல்லீஸ்வரர் பெருமானை நோக்கி நீண்ட நாட்கள் தவம் இயற்ற அவரது தவ வலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவியுடன் தரிசனம் அளித்து குருபகவானுக்கு தவ பலத்தையும் ஆன்ம ஒலியையும் மீண்டும் வழங்கி அருள் புரிந்தார்.

நவகிரகங்களில் முழுமையான சுப பலம் பெற்ற குருபகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து 'தென்திரு கயிலாயம்' என்றும் 'பூவுலகின் கயிலை' என்றும் போற்றப்படுவதாக தல புராணம் சொல்கிறது .பொதுவாக தட்சிணாமூர்த்தியானவர் தென்திசை நோக்கி தான் வீற்று இருப்பார் . ஆனால் இந்த ஆலய தட்சிணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி இருப்பது அரிதான காட்சியாகும். இவரை வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

Similar News