ஆதிபராசக்தி. சுருங்க சொன்னால் இவரே ஆதி சக்தி !
முப்பெரும் தேவி ரூபங்களும் ஆதிசக்தியின் அம்சத்திலிருந்து எழுந்த உதித்ததே ஆகும்.
இந்து மரபின் படி மிக முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் பார்வதி தேவி. இவர் மலைகளின் அரசன் என அழைக்கப்படும் இமைய மலையின் மகளாக கருதப்படுகிறார். இந்த தேவி பலவிதமான ரூபங்களை எடுத்தவர், ஒவ்வொரு ரூபமும் பல விதமான புராண கதைகளுடன் தொடர்புடையது. அந்த ரூபங்களில் மிக மிக முக்கியமானது பார்வதி தேவி அவதாரம்.
இந்த அவதாரம் முக்கியத்துவம் பெருவதற்கான காரணம் யாதெனில், இந்த கோலத்தில் தான் அவர் சிவனை மணக்கிறார். பார்வதி தேவியின் மூல ருபம் ஆதி சக்தி. ஆதி சக்தி தான் பிரதான பிரபஞ்சத்தின் மூலமாக திகழ்ந்தவர். இவரே பார்வதியாக பின்னர் அவதரித்தார். அதனால் தான் இவரை ஆதிசக்தி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களில் படி, ஆதி பராசக்தி தான் பர பிரம்மம். பகவத மஹாபுராணத்தின் படி ஆதி பராசக்தி தான் படைப்பின் மூலமாக திகழ்ந்தவர். இவரே முத்தொழிலின் அதிபதியாவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் மொத்த உலகத்திற்கும் செய்து வந்தவர்
மூலமாக இருக்கும் ஆதிசக்தி தன் அடுத்த அவதாரமாக எடுத்தது லலிதா திரிபுரசுந்தரி இவர் தான் அன்னை ஆதிசக்தியின் முதல் மற்றும் மூல வடிவம் ஆவார். லலிதா திரிபுரசுந்தரியின் அடுத்த அவதாரமே அம்பாள் பார்வதியாவார். இவர் பர்வத மலையில் மகளாக பிறந்து பின் ஈசனை மணந்தவர்.
பிரமாண்ட புராணத்தின் படி, ஆதி பராசக்தி தன்னை ஒரு விதையில் இருந்து இரண்டு அங்கங்களாக பிரித்து கொண்டார். புருஷா மற்றும் ப்ரக்ருதி என்பதே அந்த இரண்டு அம்சங்களாகும். மேலும் ஆதிசக்தி தன்னை மூன்று ரூபங்களாக பிரித்து கொண்டார். சக்தி ( துர்கை அல்லது பார்வதி), வித்யா சக்தி , மற்றும் மாய சக்தி எனவே முப்பெரும் தேவி ரூபங்களும் ஆதிசக்தியின் அம்சத்திலிருந்து எழுந்த உதித்ததே ஆகும்.
பர்வதம் என்பது சமஸ்கிருதத்தில் மலையை குறிக்கிறது. அந்த பர்வதம் எனும் பெயரை ஒட்டியே, மலையின் மகளான மலைமகளுக்கு பார்வதி என்ற திருநாமமும் உதித்தது . இந்த அடிப்படையில் தான் ஆதிசக்தியை பிரபஞ்சத்தின் அன்னை என நம் புராணங்கள் போற்றி கொண்டாடுகிறது.
Image : Pinterest