கடலிலிருந்து வேதத்தை மீட்டெடுத்து விஷ்ணு பெருமான் வணங்கிய அதிசய தியாகாரஜர் ஆலயம்!

கடலிலிருந்து வேதத்தை மீட்டெடுத்து விஷ்ணு பெருமான் வணங்கிய அதிசய தியாகாரஜர் ஆலயம்!

Update: 2021-01-18 05:30 GMT

தியாகராஜர் கோவிலை வடிவுடையம்மன் கோவில் என அழைப்பர். சென்னையின் வட திசையில் அமைந்துள்ள திருவொற்றியூரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சுந்தரர், மற்றும் சம்பந்தர் ஆகிய மூவரும் இந்த கோவிலின் மீது பாடியுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது. இந்த கோவிலுக்கும் பட்டினத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

எழு அடுக்கு கோபுரத்தை கொண்டது இந்த கோவில். பிரம்மா, விஷ்ணு சிவன் எனும் மும்மூர்த்திகளை கொண்டது நம் மரபு. அந்த வகையில் படைப்பு தொழில் செய்யும் பிரம்ம பிரான் நன்மை தீமை இரண்டையுமே படைத்தவர். நன்மை தீமை இரண்டும் தான் வாழ்க்கை. இதில் தீமையை நன்மையை மீறுவது தான் உலக இயல்பு.

வகையில் அரக்கர்களையும் படைத்தார், வேதங்களையும் படைத்தார். அரக்கர்கள் தங்களின் உடல் வலிமையை கொண்டு வேதத்தை தேவர்களை எதிர்த்தனர். அப்போது புனித வேதத்தை மது மற்றும் கைதபா என்ற அரக்கர்கள் திருடி சென்று அதனை கடலில் கிழித்து வீசினர். அதனை மீட்க விஷ்ணு பெருமான் வந்தபோது அவரால் இயலாததால் சிவபெருமானை வணங்கி மட்சய அவதாரம் எடுத்தார். அவர் கடலிலிருந்த வேத துண்டுகளை மீட்டெத்து இந்த திருத்தலத்தில் வைத்து சுத்திகரித்து மீண்டும் மீட்டெடுத்தார் என்பது வரலாறு.

இந்த கோவிலின் தல விருட்சமாக இருந்தது மகிழ மரம். மணலால் ஆனவராக இருக்கிறார் ஆதிபுரீஸ்வரர். இங்குள்ள பெருமானுக்கு புனுங்கு, ஜவ்வாது, மற்றும் சாம்பிராணி எண்ணெய் போன்றவைகளால் அபிஷேகம்ம் செய்யபடுகிறது. இந்த கோவிலில் இருக்கும் அம்மைக்கு வடிவுடையம்மை அல்லது திருப்புரசுந்தரி என்று பெயர்.

மேலும் இந்த ஆலயத்தில் இருக்கும் துர்கா அம்பிகை ரெளத்திர ரூபமாக இருந்ததால்  ஆதி சங்கரர் இங்கு ஒரு சக்கரத்தை நிறுவி அம்பிகையை செளமிய ரூபியாக மாற்றினார் என்ற குறிப்பும் உண்டு. இன்றும் கூட குறிப்பிட்ட நம்பூதிரிகள் அந்த பூஜை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

"வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்

மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்

கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று

உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே."

என்கிற இந்த தேவார பதிகத்தின் மூலம் திருவொற்றியூரின் புகழை நாம் உணரலாம்.

Similar News