சூரிய கிரகணத்தன்று அண்ணாமலையார் தரிசனம் நிறுத்தப்படாது - வியக்க வைக்கும் காரணம் என்ன தெரியுமா?
வரும் 25ஆம் தேதி அன்று சூரிய கிரகணத்தின்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 25ஆம் தேதி அன்று சூரிய கிரகணத்தின்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு மறுநாளான வருகிற 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை பகுதிநேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாலை 5:10 மணிக்கு தொடங்கி 6:30 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது. இதனை வெறும் கண்களால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்கள் நடை சாத்தப்படுவது வழக்கம். பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் ஆனால் கிரகணம் நிகழும் நாளன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலம் என்பதால் சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம்போல் திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 25-ம் தேதி மாலை 5:10 மணிக்கு கிரகணம் தொடங்கும் போது அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் நாலாம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது என கோவில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.