வருடம் 1 முறை நடைபெறும் திரு உத்திர கோசமங்கை மரகத நடராஜர் சந்தன காப்பு நிகழ்ச்சி!
திருஉத்திரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு தற்போது சிந்தனை காப்பு நிகழ்ச்சி இன்று முதல் துவங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் திரு உத்திரகோசமங்கை. இந்த திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் மங்கலநாதர் கோவில் இருக்கிறது. இது மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுர சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் மரகத நடராஜர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆருத்ரா திருவிழா ஒரு நாள் மட்டும் தான் நடைபெறும். அப்போது மட்டும் தான் பக்தர்களுக்காக பகவான் பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார்.
இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது 28ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் பக்தர்களுக்கு காட்சி அருள் பாவித்து வருகிறார். நடராஜர் இந்நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவான ஆருத்ர தரிசனம் நாளை காலை 8 மணி அளவில் வியாழக்கிழமை மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து நடராஜர் மீது சந்தன காப்புகள் முழுவதும் கலைக்கப்பட்டு பின்னர் நடராஜன் பால், பன்னீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, எண்ணெய் உள்ளிட்ட 32 பொருட்களால் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இன்று இரவு 11 மணிக்கு மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறும் உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெறும். எனவே ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு பக்தர்களும் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது.
Input & Image courtesy: Maalaimalar