வீடுகளில் குழந்தைகளை வளர்க்கும் கனிவுடன் பரிவுடன் குழந்தைகளுக்கு அடுத்த படியாக நம்மில் பலர் அக்கறை எடுத்து கொள்வது செல்ல பிராணிகளை வளர்ப்பதில். செல்லப் பிராணிகளை வளர்ப்போரிடம் சென்று, அவைகளை ஒரு சில நாள் பிரிந்து இருப்பதால் ஏற்படக்கூடிய வேதனை என்ன? எனக் கேட்டுப் பார்த்தால் செல்லப்பிராணிகள் மனிதர்களிடையே எவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்து புராணங்களில் விலங்குகள், பறவைகள், போன்றவற்றை மனிதர்களுக்கு சமமாகவே பாவிக்க வேண்டும் சொல்லப்பட்டிருகிறது. மேலும் வீட்டிற்கான நன்மைகளை ஈர்க்கக் கூடியவைகளாக விலங்குகள் இருக்கும் எனவும் சில குறிப்புகள் உண்டு. செல்லப் பிராணிகளை வளர்க்க முடியாத சூழலில் பரிந்துரைக்கப்பட்ட விலங்குகளின் பறவைகளின் படம் அல்லது சிலைகளை வைப்பதால் நன்மை உண்டாகும்.
எப்படி மனிதர்களுக்கு ஆன்மீக ரீதியான அரணாக ஆரா அமைந்துள்ளதோ அதைப் போலவே விலங்குகளுக்கும் அமைந்திருக்கும். அதை சரியான வகையில் தேர்வு செய்தோமானால் அது நமக்கும் வீட்டிற்கும் நன்மை உள்ளதாக அமையும். அந்த வகையில் உங்களுடைய ராசியின் படி எந்த செல்லப்பிராணியை வளர்க்கலாம் ?
மேஷராசியில் இருப்பவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் அவர்களின் தன்மையின் படி நாய் வகைகளை வளர்க்கலாம்.
ரிஷப ராசியில் இருப்பவர்கள் பொதுவாகவே பொறுமையும் நம்பிக்கையும் மிக்கவர்கள் இவர்கள் பூனையை வளர்க்கலாம்
மிதுன ராசியில் இருப்பவர்கள் மிகவும் அன்பானவர்கள் என்பதால் அவர்கள் கிளியை வளர்க்கலாம்
கடக ராசியில் இருப்பவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் ஆக இருப்பதால் முயல் போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கலாம்
சிம்மராசி யில் இருப்பவர்கள் கம்பீரமானவர்கள் சாத்தியங்கள் இருப்பின் குதிரை போன்ற சற்று உருவத்தில் பெரிதான விலங்குகளை வளர்க்கலாம்
கன்னி ராசியில் இருப்பவர்கள் மிகவும் மென்மையானவர்கள் மற்றும் அன்பானவர்கள் என்பதால் மீன் வகைகளை வளர்க்கலாம்