ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்ரக திருமேனி கொண்ட விநாயகர் கோவை புலியகுளம் பகுதியில் அருள்பாலிக்கிறார் . ஸ்ரீ முந்தி விநாயகர் என அழைக்கப்படும் இந்த விநாயகர் சிலை ஒரே கல்லால் ஆனது இந்த சிலையை உருவாக்க பக்தர்கள் பல சோதனைகளை கடந்து வர வேண்டி இருந்தது. தமிழகத்தில் எங்கு தேடியும் கிடைக்காமல் கடைசியில் திருப்பூர் மாவட்டம் அருகில் ஊத்துக்குளியில் 20 அடி ஆழத்தில் எந்த பின்னமும் இல்லாத பாறையை தேர்வு செய்து அங்கேயே சிலை உருவாக்கப்பட்டது . 19 அடி 10 அங்குலம் உயரமும் 1 1 அடி 10 அங்குல அகலமும் கொண்டு 190 டன் எடை கொண்டதாக உருவானது இந்த விநாயகர் சிலை. பிறகு கோவை புலியகுளம் கொண்டு வரப்பட்டு எந்த இயந்திர உதவியும் இல்லாமல் சங்கிலிகள் மற்றும் உருளைகள் கொண்டு மனித முயற்சியாலேயே நிறுவ பட்டது .
தெய்வங்களில் முதன்மையானவர் என்பதால் இவர் முந்தி விநாயகர் என்று அழைக்கபடுகிறார். தாமரை பீடத்தில் தலையில் கிரீடத்துடன் அமர்ந்துள்ளார் இந்த விநாயகர் .நான்கு திருக்கரங்களில் தந்தம் அங்குசம் பாசம் பலாப்பழம் பாசக் கயிறு ஆகியவற்றை ஏந்தியுள்ளார் விநாயகர் . துதிக்கையில் மகாலஷ்மியின் அம்சமான அமிர்த கலசத்தை தாங்கியுள்ளார் .
இந்த விநாயகர் இன்னல்களை போக்குபவர் இவரை வணங்கி சென்றால் எந்த காரியமாக இருந்தாலும் தடங்கலின்றி நடக்கிறது. நகரின் மையப்பகுதியில் இருப்பதால் காலையில் அலுவலகம் செல்வோர் முதல் அத்தனை பேரும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்
இவர் வாசுகி பாம்பை வயிற்றில் கட்டியுள்ளார் . இங்கு வழிபடுபவர்களின் ராகு கேது தோஷங்களை முற்றிலுமாக நீக்குகிறார் இந்த விநாயகர் . சித்திரை மாதம் முழுவதும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும் சித்திரை முதல் நாளில் 3 டன் பழங்களால் அலங்காரம் செய்யபடுவார் . அந்த மாதம் முழுவதும் பக்தர்களுக்கு பழங்கள் பிரசாதமாக விதியோகிக்கபடும்.
அதே போன்று சதுர்த்தி நாட்களில் பல டன் மலர்கள் கொண்டு அலங்கரிக்கபட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த கோயில் ராஜகோபுரம் கருவறை என்று எந்த கோயில் விதிப்படியும் அமையாமல் , இங்கு விநாயகர் மரத்தடியில் பிள்ளையார் அமர்ந்திருப்பது போல் அரச மரத்தின் கீழ் ஒரு மேற்கூரையுடன் எளிமையாக அமர்ந்துள்ளார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விநாயகருக்கு பல வகையான அபிஷேகம் செய்து வழிபடு கிறார்கள் ...