அஸ்வமேத யாகம் என்பது இந்து புராணங்களில், வரலாற்றில் நாம் பல முறை கேள்வி பட்ட ஒரு சடங்காகும் !

Hindu Traditional.

Update: 2021-09-12 00:39 GMT

நம் பண்டைய இந்து மரபில் ஏராளமான சடங்குகள், சம்பிர்தாயங்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. அந்த ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் ஆழமான அர்த்தமும், ஆன்மீக சாரமும் அதில் அடங்கிய இருக்கும். அந்த வகையில் அஸ்வமேத யாகம் அல்லது குதிரையை தியானம் செய்தல் என்பது புகழ்பெற்ற சடங்கு ஆகும். இந்து மரபை பின்பற்றிய மன்னர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருந்த சடங்கு இது. இந்த சடங்கு அரச பரம்பரை அல்லது மன்னர்கள் போன்ற உயர்ந்த பதவியில் இருந்தவர்களால் செய்யப்பட்டது. இந்த அஸ்வமேத யாகம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

அஸ்வமேத யாகம் என்பது இந்து புராணங்களில், வரலாற்றில் நாம் பல முறை கேள்வி பட்ட ஒரு சடங்காகும். தாத்ரியா சம்ஹிதத்தில் 7 ஆவது காண்டத்தில் இது குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. ராமாயணம், மஹாபாரதம் போன்ற புராணங்களில் அஸ்வமேத யாகம் எவ்வாறு செய்யப்பட்டது என்பது குறித்த விளக்கமான விவரணைகள் தரப்பட்டுள்ளன.

அடிப்படையில் அஸ்வமேத யாகம் என்பது மூன்று காரணங்களுக்காக செய்யப்படுகிறது. முதலில், பாவங்களில் இருந்து பரிகாரம் தேடுவதற்காக அஸ்வமேத யாகம் செய்யப்பட்டது. உதாரணமாக இராமாயணத்தில் ஒரு பெண்ணை மற்றும் பிராமணரை கொன்றதற்காக அந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக செய்யப்பட்டது. இரண்டாவது சில அரசர்கள் மற்ற நாடுகளின் மீது அதிக்கம் செலுத்தும் பொருட்டு, அடுத்த நாட்டினை ஆக்ரமிக்க அஸ்வமேதயாகம் நடத்துவார்கள். மூன்றாவதாக 100 அஸ்வங்களை தானம் வழங்கினால் இந்திரருக்கே அரசராகும் சக்ரவர்த்தியாக இருக்க முடியும் என்பதால்.

அஸ்வம் என்றால் குதிரை என்ட்ரு பொருள். மேத என்றால் சிலர் தியாகம் அல்லது பலி என நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் சாந்தி பர்வதத்தில் இது குறித்து மிக துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது. அஸ்வமேத யாகம் என்பது மிகவும் கவனத்துடன் ஒருங்கிணைக்கப்படுவது. மஹாபாரத்தில் நிகழும் அஸ்வமேதயாகத்தில் அரசர் வசு பெரும் கூட்டத்தை அழைத்து மிகவும் நேர்த்தியுடன் நடத்தியதாக குறிப்பு உண்டு. இதில் எந்த இடத்திலும் குதிரை பலியிடப்படுவதில்லை.

அரசர் அடையாளம் தாங்கி அண்டை நாட்டில் பிரவேசிக்கிற குதிரையை அனுமதிக்கும் அரசர்கள் குதிரையை அனுப்பிய மன்னரின் தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த குதிரையை பிடித்து கட்டி வைக்கிற அரசர்கள் அந்த தலைமையை எதிர்த்து போரிட தயாராக இருப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.

Image : Pinterest

Tags:    

Similar News