இறைவனின் கண்பார்வையால் விளைந்த வாழை- 'நேந்திரம்' :புராணம் கூறும் கதை என்ன?

நேந்திரம் வாழை தோன்றிய ஆன்மீக கதை பற்றி காண்போம்.

Update: 2023-08-29 17:15 GMT

திருக்காட்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். ஆனால் வாழை சரியான விளைச்சலை அளிக்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அந்த விவசாயி திருக்காட்கரை அப்பன் கோவிலுக்கு சென்று இறைவா உன்னுடைய கண்பார்வை வாழை பயிரிட்டுள்ள என் நிலத்தில் பட வேண்டும் என்று மனமுருக வேண்டிக்கொண்டார்.


திருக்காட்கரையப்பனும் தன் பக்தன் நிலத்தை தன் கண்களால் பார்த்தார். இதனால் அவர் பயிரிட்ட வாழை பயிர் அதிக விளைச்சல் கண்டவுடன் அதில் விளைந்த வாழை பெரிய அளவில் இருந்தது. இறைவனின் கண்பார்வையால் விளைந்த வாழை என்பதால் அதற்கு நேத்திரம் வாழை என்று பெயர் வந்தது .கண்ணுக்கு 'நேத்திரம்' என்ற பெயர் உண்டு. இதுவே காலப்போக்கில் மருகி நேந்திரம் வாழை என்று ஆனது .



Similar News