உடல் சுத்தத்தை பற்றி சாணக்கியர் கூறும் அறிவுரைகள் !

The Chanakyan Advise.

Update: 2021-09-15 01:44 GMT

நமது இந்து மரபில் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. உடல் தூய்மை, மனத்தூய்மை மிகவும் இன்றியமையாத ஒன்று. சாஸ்திரங்களின் படி பார்த்தல் ஒருவர் தினசரி மூன்று வேளை குளிக்க வேண்டும் என அறிவுருத்துகிறது. அதிகாலை 4.30 அல்லது ஐந்து மணியளவில் ஒரு முறையும், மதியத்தில் ஒருமுறையும் மற்றும் மாலை வேளையில் ஒருமுறையும் குளிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.  

அது மட்டுமின்றி வெளியே சென்று வரும் போதெல்லாம் ஒருவர் கை, கால் முகத்தை முறையாக சுத்தம் செய்து பின் வீட்டினுள் வர வேண்டும். இது வெறுமனே சொல்லப்பட்டது அல்ல. இப்படி செய்வதால் நம்முடைய உடல் மற்றும் மன பலம் கூடுகிறது. மற்றும் தசையின் மீதான அழுத்தம் குறைகிறது. உடல் அலுப்பு போன்றவைகளில் இருந்து உடனடியாக வெளியேறலாம். ஆனால் இன்றைய கால சூழலில் ஒருவர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே குளிப்பது என்பது நிதர்சன நடைமுறையஅக மாறிவிட்டது.

இதன் அடிப்படையில், மிகப்பெரும் இந்து ஞானியான சாணக்கியர் ஒருவர் பின்வரும் இந்த நான்கு செயல்களை செய்த பின் மிக நிச்சயமாக ஸ்நானம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுருத்துகிறார்.

முதலாவதாக துக்க வீடுகளுக்கு சென்ற வந்த பின் ஒருவர் கண்டிப்பாக குளித்து விட்டே வீட்டினுள் நுழையவோ அல்லது வீட்டில் உள்ளவர்களை தொடவோ வேண்டும். காரணம் ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்து விட்ட பின் அதிலுள்ள நுண்கிருமிகள் பரவத்தொடங்கும். மேலும் மரணம் எய்திய அந்த உடலுக்கு சடங்குகள் நிகழ்த்தப்படும் போது அது அங்கிருப்போருக்கு பரவும் வாய்ப்புகள் உண்டு. எனவே தான் நம் முன்னோர்கள், ஒருவரின் இறப்புக்கு சென்று வந்த பின் நீராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தம்பதிகள் இல்லற வாழ்வில் ஈடுபட்ட பின் நீராட வேண்டியது அவசியம். இது உடல் தூய்மைக்கும், ஆன்மீக சாதனாக்களில் தீவிரத்துடன் ஈடுபடவும் உதவும்.

மூன்றாவதாக, வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் நம் மரபில் உண்டு. எண்ணெய் தேய்ப்பதென்பது உடலில் உள்ள நுண் துவாரங்களை திறப்புடன் வைத்திருக்க உதவும், எனவே உடனடியாக சில நேரங்களில் குளித்து விடுவது நல்லது.

இறுதியாக, முடி வெட்டிய பின் ஒருவர் ஸ்நானம் செய்வது அவசியம். நம் தலைமுடியின் சிறு சிறு துகள்கள் நம் உடலில் ஒட்டியிருக்க கூடும் அது நாம் உண்ணும் உணவில் அல்லது நமக்குள் சென்று விடும் அபாயம் மிக அதிகமாக உண்டு. எனவே ஒருவர் முடிவெட்டிய பின் உடனடியாக ஸ்நானம் செய்ய வேண்டும்.

Image : Prabhat kabar

Tags:    

Similar News