லக்ஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டிய முறைகளும் வழிபடுவதால் ஏற்படும் பலன்களும்!
செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பல்வேறு பரிகாரங்கள் இருந்தாலும் அதில் முதலாவதாக லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதுயோகத்தை அளிக்கும்.
பலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் காரணத்தால் திருமணம் கைகூடாது செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் திருமண திசையை தட்டிப் பிடித்துக் கொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்கள் பயபக்தியுடன் வணங்கி வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பல்வேறு பரிகாரங்கள் இருந்தாலும் லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவது பல சிறப்புகளையும் அனுகூலமான பயன்களையும் உருவாக்கும்.
வீட்டில் லட்சுமி நரசிம்மர் படத்தை சுத்தம் செய்து மாலைகளால் அலங்கரித்து அதற்கு முன்னால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். லட்சுமி நரசிம்மரை வணங்கும் போது பானகம் வைத்து வணங்குவது மிகவும் சிறப்பு நீர், வெல்லம்,துளசி இலை, எலுமிச்சை இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை தான் பானகம் எனப்படும். லட்சுமி நரசிம்மர் விரும்பி இதனை ஏற்றுக்கொண்டு அருள் புரிவார். லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமை ராகு காலம் மிகச் சிறப்பானது. அல்லது செவ்வாய் ஹோரையிலும் வணங்கலாம். நரசிம்மர் ஆலயத்தில் ஒன்பது வாரங்கள் தொடர்ந்து நெய் தீபம் இட்டு வருவது மிகவும் சிறப்பு தரும். அதனையும் செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டும்.