பூர்வ காலங்களில் முனிவர்கள் மற்றும் ரிஷிகள் யாகம் நடத்துவதும் அதை அசுரர்கள் தடுக்க முயற்சிப்பதும் நாம் புராண கதைகளிலும் கேட்டதுண்டு . சில யாகங்களை தொடங்கி முடிப்பதற்காக கடுமையான முயற்சிகளை முனிவர்கள் எடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் யாகத்தின் சக்தி எத்தகையது என்பதை காட்டுகிறது. இந்த யாகங்கள் ஏன் செய்யப்பட்டன அவற்றின் பலன் என்ன என்பதை இங்கு பாப்போம். உலகில் மிக அடிப்படையான சக்தி களங்கள் இரண்டு இருக்கின்றன ஒன்று வெப்ப சக்தி இரண்டாவது சப்தங்களின் சக்தி. யாக தீயினால் ஏற்படும் வெப்பமும் மந்திர ஒலியினால் ஏற்படும் சப்தமும் இணைந்து குறிப்பிட்ட அலைவரிசையில் நம் உடலிலும் மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை ஆன்மீக பாதையில் உயர செய்கிறது..
மேலும் யாக பொருட்களை தீயில் அர்ப்பணம் செய்யும்போது அவை யாகத்தீயில் மாற்றாமடைந்து அதன் மணம் பல திசைகளைம்பரவும். யாகத்தீயில் புகையும் நீண்ட தூரம் பரவுவதால் அதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன
அக்னி குண்டத்தின் அமைப்பு பிரமிடை போன்ற ஒரு அமைப்பாகும் "பிரமிட்" என்கிற வார்த்தையின் அர்த்தமே நடுவில் தீ எரிவது என்றுதான் அர்த்தம். இந்த வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட யாக குண்டம் யாகத்தின் போது வெளிப்படும் அபிரிமிதமான சக்தியை முறையாக வெளிப்படுத்தும். மேலும் யாகத்தின் போது உச்சரிக்கப்படும் சமஸ்க்ரித மந்திரங்களின் ஒலி அலைகள் பிரபஞ்ச சக்தியை நமக்குள் கொண்டுவரும் தண்மையுரைவை. சமீபத்திய ஆராய்ச்சியின் படி காயத்ரி மந்திரம் ஒரு நொடியில் 1, 10, 000 ஒலி அலைகளை வெளியிடுவதாக சொல்கிறது. யாகங்கள் எப்போதும் சூரிய ஒளியில் தான் செய்யப்படும்,
யாக குண்டத்தில் இருந்து நெய்ய்யின் மூலம் வரும் நெருப்பு மற்றும் புகை அணு கதிர்வீச்சை தடுக்கும் சக்தியுடையது. பசுவின் பாலும் பசுஞ்சாணமும் அணு கதிர்வீச்சை தடுக்கக்கூடியது என்று தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே யாகங்கள் ஆன்மீக செயல்முறைக்கும் சரி, ஆரோக்கியத்திற்கும் சரி மிகுந்த நலம் பயப்பதாகவே இருந்து வந்துள்ளது.