செம்பு பாத்திரத்தில் இருக்கும் நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
வரலாற்று ரீதியாக பார்த்தால் மனிதர்களுக்கு அறிமுகமான முதல் உலோகம் என்று செம்பை சொல்கிறார்கள். பண பரிமாற்றம் தொடங்கி வணிகம் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்களாக செம்பை இந்தியர்கள் பயன்படுத்தினர். குறிப்பாக ஆயுர்வேதத்தில் குடிநீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து குடிக்கும் பழக்கத்தின் பலன்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கிருமி நாசினியாக செயல்படக்கூடிய தன்மை செம்பிற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. வெட்டு காயம், தலைவலி, வெரிகோஸ் போன்ற பிரச்சனைகளுக்கு கூட தீர்வாக செம்பு பயன்படுத்தப்படுகிறது.
குடிநீர் ஆனது செம்பு பாத்திரத்திலோ அல்லது செம்பு பாட்டிலிலோ எட்டு மணி நேரத்திற்கு மேலாக சேமித்து வைக்கப்படும் போது, செம்பானது ஐயான்ஸ் எனும் அம்சத்தை நீருக்குள் வெளியிடுகிறது. உடலின் ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்கும், செல்களின் உருவாக்கத்திற்கும் இந்த செம்பானது பெரிதும் உதவி செய்கிறது, எனவே நீர் அல்லது உணவின் மூலமாக இந்த செம்பின் தன்மை நமக்க்குள் செல்வது மிகவும் உகந்தது. செம்பில் நீரை சேகரித்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
அமெரிக்க கேசர் சொசைட்டி கூற்றின் படி, செம்பானது கொழுப்பு மற்றும் ட்ரைகிளசரிட் அளவை குறைக்கிறது. மேலும் இன்றைய பணிச்சூழலில் பலரும் ஹைபர் டென்சன் எனும் அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார். அந்த அழுத்தத்தை இந்த செம்பு தன்மை நீக்குகிறது.
அடுத்து, தைராய்டு பிரச்சனையால் அவதியுறுபவர்கள் இதில் சேகரித்த நீரை அருந்துகிற போது அந்த செம்புத்தன்மையானது தைராய்டு சுரபியின் செயல்பாட்டில் ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது என்கின்றனர். இந்த செம்புத்தன்மையானது தைராய்டு சுரபியில் இயக்கத்தை தூண்டுகிறது, அதே வேளையில் அதிகமாக சுரக்கும் தன்மையை கட்டுப்படுத்தவும் செய்கிறது.