பறவைகளுக்கு நீர் வைப்பதால் இத்தனை ஆச்சர்ய நன்மைகளா? வியப்பான தகவல்

Update: 2021-12-17 00:30 GMT

பறவைகள் பட்சிகளுக்கு உணவளிப்பது மனித தன்மையின் உச்சம். அதேவேளையில் பட்சிகளுக்கு நீர் அளிப்பது மற்றும் உணவளிப்பதால் நமக்கு ஆன்மீக ரீதியான நன்மைகளும் உண்டு என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன.

பறவைகளுக்கு தண்ணீர் அளிப்பதென்பது நாம் பட்சிகளுக்கு உதவும் செயல் மாத்திரம் அல்ல நமக்கு நாமே உதவிகொள்வதாகும். கொளுத்தும் சூரியனுக்கு கீழே இளைப்பார நீர் தேடி அலையும் பட்சிகளுகு எந்த பிரதிபலனும் பாராமல் நீர் கொடுப்பது மனித நேயத்தின் முக்கிய அம்சம். நாம் பலன்கள் ஏதும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதற்குரிய நற்வினைகளும் நம்மை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை. ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த செயல் அமைவதுண்டு.

பறவைகளுக்கு நீர் வார்ப்பதால் குண்டலினியில் இருக்கும் கிரஹ தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நம் வாழ்வின் நன்மை தீமைகளை அருளும் சனி பகவானை குளிர்விக்கும் செயலாக இது கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேன்மையடைய பட்சிகளுக்கு நீர் வார்ப்பது நன்மை தரும் என்று சொல்லப்படுகிறது. ராகு மற்றும் கேதுவில் மகா தோஷம் இருப்பினும் பறவைகளுக்கு உணவும் நீரும் வழங்க சொல்வார்கள்.

இதன் தார்பரியம் யாதெனில், பறவைகளிடையே ஒரு நிறைவை நாம் ஏற்படுத்தினால் அந்த நிறைவு நம் இல்லத்தையும் நிறைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் குடும்பத்தில் நிலவும் சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கி அன்பு பெருகும். மேலும் பறவைக்கு தங்க இடம் தருவதாலும், குட்டிகள் ஈன அனுமதிப்பாலும் வீட்டில் சுப காரியங்க நிகழும் என்பது ஐதீகம்.

குறிப்பிட்ட பட்சிகளின் வரவால் புது மனை வாங்குதல் அல்லது கட்டுதல், மற்றும் குழந்தை பேறு ஆகியவை நிகழும் என்பது இயற்கை காட்டும் சமிக்கையாக நிமித்த சாஸ்திரம் சொல்கிறது. மேலும் பறவைகளும் மண்ணாலான பாத்திரங்களில் நீர் அல்லது உணவை கொடுப்பதால் வழக்குகள் சுமூகமாக முடியும் என்றும் சொல்லப்படுகிறது. பெற்றோர் பிள்ளை உறவு, ஆகியவை இதனால் மேம்படும். பறவைகளுக்கு நாம் நீர் அளிக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு நாம் ஒரு செய்தியை சொல்கிறோம் அதாவது நம்மை தவிர்த்து பிற உயிரினங்களுக்கும் நம்மால் ஆனவற்றை வழங்கும் தன்மையில் நாம் இருக்கின்றோம். இந்த செய்தி பிரபஞ்சத்திடம் பகிரப்படும் போது, நமக்கு மேலும் தேவையான செல்வ வளமும், செளந்தர்யமும் கிடைக்கிறது என்பது நம்பிக்கையாகும்.

Image The conversation

Tags:    

Similar News