வழிபாட்டில் தூபத்தை பயன்படுத்துவது ஏன்? அதனால் நிகழும் ஆச்சர்ய நன்மைகள் !
நமது அன்றாட வழிபாட்டின் ஒரு அங்கமாக இருப்பது ஆரத்தி, கற்பூரம், ஊதுபத்தி மற்றும் தூபம் போன்றவை. இதில் நீங்கள் கூர்ந்து கவனித்தால் நறுமணம் அல்லது தெய்வீக மணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எவ்வாறு இசையால் மனதை ஒரு நிலைப்படுத்தவும் அமைதி படுத்தவும் முடிகிறதோ அது போலவே நறுமணத்தினால் மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். மனதை அமைதியடை செய்ய முடியும் என்கின்றன ஆய்வுகள்
மேலும் ஆன்மீக கலாச்சாரத்தில் வாசனைக்கென்று அதிக முக்கியத்துவம் தரப்பட் து. வாசனைகளுக்கு நியாபக சக்தி உண்டு. மேலும் வழிபாட்டின் போது தூபம் இடுவதால் அந்த இடம் சுத்திகரிக்கப்படுகிறது. ஆன்மீக ரீதியில் தீய சக்திகளிடமிருந்தும், அறிவியல் ரீதியாக பார்த்தால் சிறிய பூச்சிகள் மற்றும் கிருமிகளிடமிருந்தும் நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
இறைவனுக்கு அர்பணிக்கப்படும் பொருட்கள் சில, உதாரணமாக கந்தம் எனப்படும் சந்தனம், புஷ்பம் எனும் மலர்கள், அக்ஷதை எனும் அரிசி, தூபம் எனும் சாம்பிராணி அல்லது ஊதுபத்தி, மற்றும் தீபம் இவை முக்கிய அர்பணிப்புகளாக நம் மரபில் கருதப்படுகின்றன. தூபமிடுவதின் அறிவியல் நன்மைகள் இங்கே தொகுத்துள்ளோம்.
அவை மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இந்த தூபத்தின் நறுமணமானது மனதின் கவனக்குவிப்பை அதிகரிக்க செய்கிறது. இது தியானத்தில் ஒருவர் அமர்கிற போது அவருடைய மனம் உடனடியாக ஒரு நிலையில் குவிந்து ஆழமான தியான நிலைக்கு செல்ல தூண்டுதலாக இருக்கிறது. மேலும் அறிவியல் ரீதியாக பார்த்தால், சில குறிப்பிட்ட மூலிகைகளை கொண்டு தூபம் இடுகையில் தலைவலி, மன அழுத்தம் ஆகியவை நீங்குகின்றன.
நீங்கள் தூபத்தை கவனமாக பார்த்தால் அவை கற்பூரம் போல உடனடியாக எரிந்து அணைந்துவிடுவதில்லை. அவை மிக நிதானமாக எரிந்து மெல்ல மெல்ல நறுமணத்தை பரப்புகின்றன.. இது மனம் ஒவ்வொரு நிலையாக அமைதியடைவதை உறுதி செய்கிறது.
பல வகையான மூலிகைகள் மற்றும் மூலப்பொருட்களை கொண்டு தூபங்கள் தயாரிக்கப்படுகின்றன. தரமான தூபங்களை நாம் பயனப்படுத்தினால் அவை ஆஸ்துமா போன்ற தீராத நோய்களை சீராக்க கூட உதவிகரமாக அமையும்.
Image : India Mart