சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர்!
சுந்தரருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர் ஆலயம் பற்றி காண்போம்.
சைவ சமய குறவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார் . இவர் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து வாழ்ந்து வந்தார். சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணக்க முடிவு செய்தார். இது குறித்த அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என மறுப்பு தெரிவித்தார். சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்ததால் சிவபெருமானே அவருக்கு சங்கிலி நாச்சியாரை தன் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அப்போது இனிமேல் முதல் மனைவியான வரவே நாச்சியார் பார்க்க செல்லக்கூடாது என்று சிவபெருமான் கூறினார். அதற்கு செல்ல மாட்டேன் என்று கூறினார் சுந்தரர் .
சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம் நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது என கூறினார். மேலும் சத்தியமும் செய்து கேட்டார். உடனே சுந்தரர் அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ மர தடியில் நின்று "உன்னை விட்டு பிரிந்து மீண்டும் முதல் மனைவியுடன் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். சில காலங்கள் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனருக்கு திடீரென முதல் மனைவி பரவை நாச்சியாரின் நினைப்பு வந்து மனதை வருத்தியது. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் சிவபெருமானுக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்துகொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு கிளம்பினார்.
சுந்தரர் திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவரது கண்களில் பார்வை பறிபோகும்படி செய்துவிட்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர் சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடடுமாறுபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார் . சுந்தரமூர்த்தி நாயனார் இங்கும் சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். ஆனால் சிவனோ அமைதியாகவே இருந்தார்.