குழந்தைகளுக்கு கண்ணாடி காண்பிக்கலாமா?

குழந்தைகளுக்கு கண்ணாடி காண்பிப்பதால் நிகழும் விளைவுகள்

Update: 2022-08-08 12:00 GMT

குழந்தைகளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பிக்கக் கூடாது என்று முதியோர்கள் கூறுவதுண்டு.

கண்ணாடியில் தன் சுய பிரதி பிம்பத்தைப் காணும் குழந்தை வியங்கள் புரிந்து கொள்ளும் இயல்புள்ளதானால் மிக மகிழ்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நண்பன் வந்து விட்டதாக கருதி சொந்த பிரதி பிம்பத்தை அதிசயத்துடன் பார்க்கும் குழந்தைகளும் உண்டு.

குழந்தைகள் கண்ணாடி பார்த்தால் சுயரூபத்தை நாட்டம் கொண்டு அதில் மட்டும் ஆர்வம் கொண்டிருக்கும் என்பதால் குழந்தைகளை கண்ணாடிக்கு முன் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்கத்தான் சிறுவயதிலேயே இதை கட்டுப்படுத்த நினைப்பது என்று சில பெற்றோர்கள் கருதுகின்றனர்.

அழகில் குறைவுள்ள குழந்தைகள் கண்ணாடி பார்த்தால் மன குழப்பம் அடைய நேரிடும் என்று கருதுகின்றனர்.

ஆனால் மிகப்பெரிய மூடநம்பிக்கை ஒன்று பரவி வந்தது என்னவென்றால் கண்ணாடியில் குழந்தைகள் தம் சுய உருவத்தை காணவில்லை என்றும் பிசாசுகளையே காண்கின்றனர் என்று கருதினர். கண்ணாடியில் தோன்றும் பிசாசுகள் ஆக்கிரமிக்க முயல்வதை குழந்தைகள் காண்கின்றன என்றும் குழந்தை அழுவது இதனால் என்றும் சிலர் நம்புகின்றனர்.

ஆனால் கண்ணாடியில் பார்க்கும்போது சில நேரம் சூரிய ஒளி பிரதிபலிக்க வாய்ப்புண்டு என்றும் அது குழந்தையின் கண்ணில் தட்டி ரெட்டினா சேதமடையலாம் என்பதால் குழந்தைகளை கண்ணாடிக்கு முன் காண்பித்தல் ஆபத்து.

கவனமில்லாமல் கண்ணாடியை பயன்படுத்தினால் நண்பகல் நேரமானால் கண்ணாடியில் பிரதிபலித்து வரும் சூரிய ஒளி நேரடியாக சூரியனை பார்க்கும் போதுள்ள அதே தீவிரத்துடன் கண்களுக்குள் நுழையும்.

கை கால் உதறி அழும் குழந்தையின் கண்ணாடி பிரதிபலிப்பும் அவ்வாறே இருக்கும் இது வேறு நபர் என்று எண்ணி குழந்தை பயப்படும் என்று கூறப்படுகிறது.



Similar News