மரத்தின் நிழலில் வீடு கட்டலாமா? வாஸ்து சொல்லும் ஆச்சர்ய குறிப்புகள்

Update: 2021-03-10 00:00 GMT

வாஸ்து சாஸ்திரம் என்பது மிக எளிமையான தத்துவத்தை கொண்டு இயங்குகிறது . நல்ல அதிர்வுகளை வீட்டிற்குள் வருமாறு செய்து மோசமான அதிர்வுகளை வீட்டை விட்டு வெளியேற்றுவதுதான் அதன் அடிப்படை தத்துவம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி அதிர்வு இருக்கிறது. வாழ்கிற மனிதர்கள் அந்த சக்தி அதிர்விற்கு உட்பட்டே வாழ்கிறார்கள், அதற்கேற்றபடி அவர்கள் வாழ்வு நன்மை நிறைந்ததாகவோ தீமை நிறைந்ததாகவோ அமையும். இது பல நிபுணர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இந்த விஞ்ஞானத்தை பற்றி சில குறிப்புக்கள் ..



 


தென் மேற்கு திசையில் கதவு இருந்தால் தீய சக்திகள் நுழைவதற்கு ஏதுவாக அமைந்துவிடும் அதனால், அதை குறித்து கவனமாக இருக்க வேண்டும், அப்படியே அந்த திசையில் கதவு இருந்தால், அங்கு ஒரு அனுமன் படம் கொண்ட டைல்ஸையோ படத்தையோ மாட்டினால் இந்த பிரச்சனை தீரும்.

மேலும் சமையல் அறை என்பது தென் கிழக்கு திசையில் தானிருக்க வேண்டும். சமையல் செய்யும் போது கிழக்கு நோக்கி செய்ய வேண்டும். சமையல் அறை நேரடியாக கதவிற்கு எதிராக இருக்க கூடாது. வட கிழக்கு மூலையில் கிணறு இருப்பது சிறந்தது, வீடு கட்டும்போது வட கிழக்கு மூலையில் கிணறு வெட்டி அதிலிருந்து வரும் தண்ணீரை வீடு கட்ட பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் பெருகும்.



அதே நேரத்தில் தென் மேற்கு மூலையில் கிணறோ தண்ணீர் தொட்டியோ இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது அது கஷ்டத்தை கொடுக்கும். மரத்தின் நிழலில் வீடு கட்ட கூடாது என்று சிலர் சொல்வார்கள் ஆனால் அதற்கும் வாஸ்துவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீட்டை சுற்றி எந்த திசையில் வேண்டுமானாலும் மரம் நடலாம், ஆனால் மரத்தின் நிழல் வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியை தடுக்காமல் இருக்க வேண்டும் . கழிப்பறை வடமேற்கு மூலையில் இருக்க வேண்டும், எல்லை என்றால் தென் கிழக்கு மூலையில் இருக்கலாம், ஆனால் பூஜை அறை சமையலறை மற்றும் கழிப்பறை இவை மூன்றும் அருகருகவே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் முன்புற அல்லது வரவேற்பு அறையில் பூக்களையோ அல்லது விளக்கோ வைப்பது நேர்மறை சக்திகளை ஈர்க்கும்

Tags:    

Similar News