முடித்திருத்தம் செய்ய நாள் பார்ப்பது சரியா? செவ்வாய் வெள்ளியை தவிர்ப்பது ஏன்?

Update: 2023-01-31 00:15 GMT

நமது பாரம்பரியத்தில் பலவிதமான நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நம்பிக்கைகள் மருவி மூட நம்பிக்கை ஆகி விட்டது. ஆனால் நம்முடைய பெரும்பாலான பழக்க வழக்கங்கள் எதுவும் காரணமற்ற மூட நம்பிக்கைகள் அல்ல. அனைத்துமே ஆழமான புரிதலுடன், தேவையுடன் உருவாக்கப்பட்டவையே, இன்றைய கால்ல காட்டத்திற்கு அவை ஏற்பில்லாமல் இருப்பதால் மூட நம்பிக்கை என்று வறையறுத்து விட்டோம். அன்றி, இன்றளவும் ஒரு சில பழக்கங்கள் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது.

அதன் அடிப்படையில், நம் சம்பிர்தாயத்தில் சொல்லப்படும் ஒரு விஷயம் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் முடி திருத்தம் அல்லது வெட்டுதல் கூடாது என்பது. ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது . இதற்கான அடிப்படை காரணமாக சொல்லப்படுவது, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை மஹா இலஷ்மிக்கு உகந்த நாளாகும். அந்நாளில் இந்த செயலில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி அனுமானுக்கு விரதம் இருப்பவர்கள் இந்நாளை தான் தேர்வு செய்வார்கள். எனவே இலட்சுமி மற்றும் அனுமன் விரதம் மற்றும் பூஜையில் ஈடுபடுபவர்கள் இந்நாளில் முடி திருத்தம் செய்வதென்பது உகந்ததல்ல என சொல்லப்பட்டது .

இதை சிலர் மறுக்கவும் கூடும். நம்முடைய முன்னோர்கள் ஒரு கருத்தை உருவாக்குவதற்கு முன்பு அதை பல்வேறு கூறுகளின் அடிப்படையில் உருவாக்குகின்றனர், ஆரோக்கியம், ஜோதிடம், அறிவியல், உடல் ஒழுக்கம் என அனைத்தும் ஒருங்கே அமைந்த முறையை தான் அவர்கள் உருவாக்கினார்கள்.

இதற்கு பின்னால் சொல்லப்படும் அறிவியல் காரணம் யாதெனில், இந்நாளில் தான் கிரகங்களில் இருந்து ஒரு சில கதிர்கள் வெளிப்படும். அந்த கதிர்களுக்கு நம் உடல் மீது நேரடியான தாக்கம் இருக்கும். குறிப்பாக செவ்வாய் கிழமையில் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருகிறது. அந்த நேரத்தில் உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அப்போது நமக்கு முடி திருத்தம் செய்வதன் மூலம் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அது மூளையை தலை பகுதியை மிக அதிகமாக பாதிக்கும். இது போன்ற பாதிப்புகளை தவிர்க்கவே செவ்வாய் மற்றும் வெள்ளியில் நகம் வெட்டுவது, முடி திருத்துவது போன்ற செயல்களை நம் முன்னோர்கள் தவிர்க்க சொன்னார்கள்.

Tags:    

Similar News