பஞ்சபூதங்களை நம் விரல்களின் முத்திரையால் கட்டுப்படுத்த முடியுமா?

Update: 2021-03-14 02:04 GMT

நமது விரல்கள் மிகப்பெரிய சக்தியை உள்ளடக்கியவை. விரல் நுனிகளில் இந்த பிரபஞ்சமே அடங்கி இருக்கிறது என்று சித்தர்கள் கூறுகிக்கிறார்கள். இந்த விரல் பகுதிகள் குறிப்பிட்ட முறையில் ஒன்றை ஒன்று தொடும் போது நமக்கு பெரிய சக்தி கிடைக்கிறது. உடலில் பல நோய்கள் குணமாகிறது. நம்முடைய மனம் சீராகி ஆன்மீக விழிப்புணர்வும் இதனால் ஏற்படுகிறது. விரல்கள் என்பவை நம் உடலோடு சேர்ந்த ஒரு பாகம் மட்டுமல்ல, நம் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களும் ஐந்து கிரஹங்களை குறிக்கின்றன.


 



பஞ்ச பூதங்களின் சக்தியும் ஐந்து விரல்களில் அடங்கி இருக்கிறது. பெருவிரல் செவ்வாயையும், ஆள்காட்டிவிரல் குருவையும், நடு விரல் சனியையும், மோதிர விரல் சூரியனையும் சிறுவிரல் புதனையும் குறிக்கிறது, மேலும் பஞ்சபூதங்களான நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் நீறு போன்றவைகளின் சக்தி மேல குறிப்பிட்டுள்ள முறையின் படி பெரு விரலில் இருந்து சிறுவிரல் வரை இருகிறது, இந்த ஐந்து விரல்களுக்குள்ளும் பஞ்ச பூதங்களும் கிரஹங்களின் சக்தியும் அடங்கி இருக்கிறது.



இதில் நோய் தீர்க்கும் சில முத்திரைகளை மட்டும் பார்க்கலாம். ஆஸ்த்மா நோய் இன்று பலருக்கும் இருக்கின்றது. பஞ்சபூதமான ஆகாயம் எனும் சக்தி உடலில் தடை படுவதால் வரக்கூடியது இந்த நோய் குணமாக இரண்டு கை விரல்களையும் வணக்கம் சொல்வது போல் எதிரெதிராக அனால் சேர்க்காமல் வைத்துக்கொண்டு நடுவிரல்களை மட்டும் மடித்து அதன் நகங்களை மட்டும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு செய்ய வேண்டும், மற்ற விரலைகள் அப்படியே இருக்கலாம். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் மருந்துடன் இதை தினமும் 5 முறை செய்து வந்தால் நோய் தாக்கம் பெரும்பாலும் குறையும் . அதே போல் மோதிர விரலின் நுனி பகுதியை பெரு விரலின் நுனி பகுதியுடன் இணைத்து செய்யும் பிரிதிவி முத்திரை நம் உடலில் இருக்கும் நிலம் எனும் சக்தியின் குறைபாட்டை நீக்கும், எதற்கெடுத்தாலும் பயம், சோம்பல், உடல் பலவீனம் போன்றவற்றை போக்க இந்த முத்திரையை பயன்படுத்தலாம். குளிர் களங்களில் மோதிர விரலை மடக்கி அதன் மீது பெருவிரலை வைத்து அழுத்தும் சூர்ய முத்திரையை செய்தால் உடல் சூடு அதிகரிக்கும், இது மட்டுமல்லாது, விநாயகர், சிவன், துர்கை காளி, குபேரன், விஷ்ணு, போன்ற தெய்வங்களுக்கும்

முத்திரைகள் உள்ளன. இந்த முத்திரைகள், பஞ்சபூத சக்திகளை சமன் செய்வதோடு, உடலில் நோய்களை நீக்கி தெய்வங்களின் அருளையும் நமக்கு பெற்றுத்தரும்.

Tags:    

Similar News