ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது உண்மையா?ஆமையால் நிகழும் ஆச்சர்யங்கள்

Update: 2022-02-01 00:45 GMT

நமது கலாச்சாரத்தில் பொதுவான ஒரு சொலவடை ஒன்று உண்டு. ஆமை பூந்த வீடு விளங்காது என்பார்கள். இதற்கான பொருளாக ஆமை எனும் உயிரினம் புகுந்த வீடு நல்ல வகையில் இருக்காது என்று சொல்கின்றனர். இது உண்மை தானா? எனும் கேள்வி நம்மிடையே உண்டு. உண்மை தான் எனில், ஏன் ஆமை என்பது ஒரு துருதிருஷ்ட்ரவசமான உயிரனமாக நாம் வகைப்படுத்த வேண்டும் என்கிற கேள்வியும் வருகிறது. இதில் மறைந்திருக்கும் உண்மை தான் என்ன?

நம் பழமொழிகள் எல்லாம் மிக தொன்மையானவை, தொடக்க காலத்தில் ஒருவிதமாக சொல்லப்பட்டு காலப்போக்கில் அவை மருவி வேறு வகையாக பொருள் கொள்ள பட்டவைகளில் இந்த பழமொழியும் ஒன்று. உண்மையில் இந்த பழமொழி "ஆம்பி பூத்த வீடு விளங்காது " என்பதாக ஒரு சாரர் சொல்கின்றனர். அதாவது ஆம்பி என்றால் காளான். காளான் எங்கு முளைக்கும். வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத இடத்தில், ஈரப்பதம் நிறைந்த இடத்தில் முளைப்பதே ஆகும். இது போன்ற ஒரு இடத்தில் வாழக்கூடிய மனிதர்களின் ஆரோக்கியம் கேள்வி குறி தான். எனவே தான் ஆம்பி பூத்த வீடு விளங்காது என்றார்கள். ஆனால் அதுவே மருவி ஆமை பூந்த வீடு விளங்காது என்பதாக மாறிவிட்டது என்கின்றனர்.

எனில் வீட்டினுள் ஆமையை வைக்கலாமா என்றால். வாஸ்து சாஸ்திரத்தின் படி மிக நிச்சயமாக வைக்கலாம். ஆமையை வைக்கும் உலோகம் மற்றும் திசையை பொருத்து அதன் பலன்கள் மாறுபடும். ஆமை என்பது நமது மரபில் மஹா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறது. பாற்கடலை கடைகிற போது பல மங்களகரமான பொருட்கள் வெளிப்பட்டன. பாரிஜாத மரம், ஐராவதம், நிலவு, காமதேனு, மஹா லட்சுமி என நீளும் பட்டியலில் அந்த கடலை கடைவதற்கு மந்தாரை மலையை சுமந்து வர கூர்ம அவதரமாம் ஆமை வடிவில் மஹா விஷ்ணு அவதாரம் எடுத்தார்.

எனவே ஆமை என்பது மஹா விஷ்ணுவின், இலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. பகவத் கீதையில் கூட எப்படி ஆமையானது தனது சரீரத்தோடு ஒட்டியிருந்தாலும் தேவைப்படும் போது அந்த ஓடுகளிலிருந்து தன்னை விடுவித்தும், உள்ளிளுத்தும் கொள்கிறதோ அதைப்போலவே மனிதர்கள் இந்த புறவுலக ஆசை மற்றும் லெளகீக வாழ்வின் மீதான பற்றிலிருந்து ஒன்றியும், ஒன்றாமலும் இருத்தல் வேண்டும் எனும் தெய்வீக ஞானத்தை உணர்த்துவதாக ஆமை இருக்கிறது.

Tags:    

Similar News