பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா?

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா?அப்படி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன என்பது பற்றி தகவல்

Update: 2022-08-19 14:45 GMT

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை தடை செய்து ஆசாரியர்கள் விதி வகுத்துள்ளனர். ஆண்களும் சரியான முறையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில்லை என்று நாம் காண்கின்றோம்.

மார்பு, நெற்றி, வாக்கு மனசு, கை, கண், கால்முட்டு என்பவைகளை நமஸ்காரத்தில் உபயோகிக்கும் 8 உறுப்புக்கள்.நமஸ்கரித்துக் கிடக்கும் போது இரண்டு கால்களின் பெருவிரல்கள்,

இரண்டு கால் முட்டுக்கள்,மார்பு,நெற்றி என்ற நான்கு பாகங்கள் மட்டுமே தரையில் தொடலாம் என்று போதித்துள்ளனர். கைகள் தரையில் தொடாமல் இவ்வாறு கிடக்க முடியாது என்பதால் கைகளை எடுத்து தலைக்கு மேல் நீட்டி வணங்குவதுதான் சாஷ்டாங்க நமஸ்காரம்.


தரையில் தொட்டிருக்கும் 4 பாகங்களும் தொழும் கையும் சேர்ந்து ஐந்து அங்கம் ஆகும். எஞ்சிய மூன்றும் வாக்கு,கண், மனது என்பவை ஆகும்.அதில் வாக்கினால் மந்திரம் சொல்லி கண்களால் பார்த்து மனதால் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு கவிழ்ந்து படுத்து செய்வதனால் மார்பில் அழுத்தி அசௌகரியம் உண்டாவதால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களைத் தவிர்க்கவே பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாகாது என்று விதிக்கப்பட்டிருக்கிறது.

நவீன மருத்துவத் துறையும் இவ்விதியை ஆமோதிக்கும். கருப்பையின் நன்நிலைக்கு இவ்வித நமஸ்காரம் தீங்கிழைக்கும் என்று கூறுகின்றது. கருப்பைக்கு இடம்பெயர்தலும் நிகழலாம் என்றும் இது கீழே தள்ளி வரும் ஆபத்தான நிலை பல பெண்களிலும் காணப்படுவதாகவும் கண்டறிந்தனர்.


ஆனால் பெண்கள் குனிந்து வணங்கலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.இது கருப்பையின் நன் நிலைக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மையானதாக கருதுகின்றனர்.

Similar News