தீபாவளியை கொண்டாடுவதால் இலட்சுமியின் ஆசியை பெறலாம்! எப்படி ?

தீபாவளியை கொண்டாடுவதால் இலட்சுமியின் ஆசியை பெறலாம்! எப்படி ?

Update: 2020-11-13 06:00 GMT

தீபாவளியை ஏன் கொண்டாட வேண்டும்? தீபாவளி என்பது வெறும் கொண்டாடத்திற்கான பண்டிகை மட்டுமல்ல. புத்தாடை, பட்டாசு என்று திரும்பிய திசையெல்லாம் கொண்டாட்டம் நிறைந்த ஒரு பண்டிகை அல்ல.. இதற்கு பின் வரலாற்று சிறப்பு மிக்க பல விஷயங்கள் அடங்கியுள்ளன.

இந்த பண்டிகை செல்வத்தின் அதிபதியான மஹாலட்சுமியின் பிறந்த தினம் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி விஷ்ணு பெருமானின் ஐந்தாம் அவதாரமான வாமண அவதாரத்தில் பலி மன்னன் இலட்சுமி தேவியை சிறைப்பிடித்திருந்த போது, அந்த பிடியிலிருந்து இலட்சுமி தேவியை மீட்ட நாள் தீபாவளி என்பதாலும் இந்த நாளில் இலட்சுமியை உகந்தது சிறந்தது என சொல்லப்படுகிறது.

அடுத்ததாக நாம் அனைவரும் அறிந்த நரகாசுரனின் வதம். மிகவும் அரக்கத்தனமாக நடந்து கொண்டிருந்த அரக்கனான நரகாசுரனை கொன்று அவன் பிடியிலிருந்த 16,000 பெண்களை பகவான் கிருஷ்ணர் மீட்ட இந்த நாள் .

தீபாவளி குறித்து புராணம் சார்ந்து சொல்லப்படும் மற்றொரு குறிப்பு என்னவெனில், பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய அமாவசை நன்னாளில் ஊர் மக்கள் தீபமேற்றி, பெரும் பண்டிகையாக கொண்டாடினார்கள் அந்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.

அடுத்து ராமயணத்தின் படி, ராவணனை வதம் செய்து அவனுடைய சாம்ராஜ்ஜியத்தையே அழித்து இலட்சுமணன், சீதையுடன் அயோதி திரும்பிய நன்னாளில் அயோதி மக்கள் மிகவும் கொண்டாட்டத்துடன் தீபங்கள் ஏற்றி கொண்டாடிய நாளே தீபாவளி எனவும் சொல்லப்படுகிறது.

எது எப்படியாயினும், தீபாவளி என்பது இந்து மரபில் மிக மிக முக்கியமான பண்டிகை. இந்துக்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தீபாவளி என்பது கோலாகலம் தான்.

ஏன் பல முக்கிய நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள் என பலரும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் பண்டிகையின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். தீமை அழித்து அனைவர் வாழ்வில் நன்மையின் ஒளி பிரகாசமாக சுடர்விட வேண்டும் என்பதே இந்த பண்டிகையின் தார்பரியம். புராண கதைகள் எதுவாயினும், அதில் சொல்லப்படும் ஒரே விஷயம் நல்ல ஆற்றல் பெருகும் ஒரு உன்னத திருநாள் தீபாவளி என்பதே.

Similar News