அயோத்தியின் ஶ்ரீராம் ஜென்மபூமி கட்டுமானத்திற்கு ஒரு கோடிக்கு மேல் நிதி வழங்கிய கிறிஸ்துவ அமைப்புகள்!

அயோத்தியின் ஶ்ரீராம் ஜென்மபூமி கட்டுமானத்திற்கு ஒரு கோடிக்கு மேல் நிதி வழங்கிய கிறிஸ்துவ அமைப்புகள்!

Update: 2021-02-17 10:13 GMT
அயோத்தியில் உருவாகி வரும் ஶ்ரீ ராம ஜன்மபூமி ஆலயத்தின் கட்டமைப்பு பணிகளுக்காக பெங்களூருவை சார்ந்த கிறிஸ்தவ  சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர். துணை முதல்வர் சி.என் அஸ்வத் நாரயண் அவர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நிதி திரட்டும் திட்டம் தொடர்பாக கிறிஸ்தவ சமூகத்தினருடன் கலந்தாலோசிக்க திரு. நாரயண் அவர்கள் கூட்டிய கூட்டத்தில் இந்த பங்களிப்பு  வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தொழில் முனைவோர், வியாபாரிகள், கல்வியாளர்கள், என்.ஆர்.ஐக்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், விற்பனை துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 “பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், குறிப்பிட்டதை போல   “சப் கா சாத், சப் கா விகாஸ் “ மக்கள் சார்ப்பு நடவடிக்கைகளையே பா.ஜ.க நம்புகிறது “.  “அனைத்து விதமான சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய கட்சி பா.ஜ.க. இந்த நிர்வாக கோட்பாடே மத்தியிலும் மாநிலத்திலும் பின்பற்றப்படுகிறது “ என தெரிவித்தார் திரு. நாராயண்.

Similar News