குலசேகரன்பட்டினம் தசரா விழா: சூரசம்ஹாரம் தினத்தில் பக்தர்களுக்கு தடை!

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். அதில் இரவு நேரங்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Update: 2021-10-14 06:22 GMT

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோயில் விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 9ம் நாளான இன்று (அக்டோபர் 14) இரவு 8.30 மணியளவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோயில் பிரகாரத்தில் வலந்து வந்து அருள் பாலிக்கின்றார். இன்று காலை முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான சூரம்ஹாரம் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோயில் முன்பாக பக்தர்கள் இன்றி எளியை£க நடைபெறுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News