சபரிமலை கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி.. கட்டாயம் இதை கொண்டுவர வேண்டும்.!
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்வில்லை. கடந்த மாதங்களுக்க பின்னர் நாளை முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் எடுத்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.