சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாற்றில் குவியும் பக்தர்கள்.!

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாற்றில் குவியும் பக்தர்கள்.!

Update: 2020-12-19 08:46 GMT

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிய தொடங்கியுள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மக்கள் கூட்டம் எப்போதுமே அலைமோதும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கவில்லை. இதனிடையே கொரோனா தொற்று குறையத்தொடங்கியுள்ளதால் தற்போது பக்தர்களை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சனி பெயர்ச்சி, சனி பரிகாரம் செய்வது என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோயில். வருகின்ற 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். சனிப்பெயர்ச்சிக்கு முன்வரும் முதல் சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. வருகின்ற 27ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்வது குறிப்பிடத்தக்கது.

Similar News