தானத்திற்கும் தர்மத்திற்கும் ஆன வேறுபாடு- உயர்வானது எது?
தானம், தர்மம் ஆகிய இரண்டும் பொதுவாக வழக்கத்தில் உள்ளதுதான். இரண்டும் ஒன்றா? இல்லை இரண்டும் வேறுபட்டுள்ளதா? எது எதை விட உயர்ந்தது காண்போம்.
நம்மை விட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக நல்ல காரியங்களுக்கு நாம் தருவதை தானம் என்று சொல்லலாம். நம்மை விட வசதி குறைந்தவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை தர்மம் என்று சொல்லுவோம். நெருப்பின் தர்மம் சுடுவது, நீரின் தர்மம் பள்ளத்தை நோக்கி பாய்வது என்று சொல்லும் போது இங்கு 'இயல்பு' என்ற பொருளிலேயே தர்மம் என்று சொல்லை நாம் பயன்படுத்துகிறோம்.
தானம் என்ற சொல் பொதுவாகவே நாம் பிறருக்கு செய்யும் பொருள் உதவியை குறிக்கவே உபயோகப்படுத்தப்படுகிறது. தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மீக வழியை பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல், நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல் இவை அனைத்தும் சேர்ந்தது தான் தர்மம். தானம் தர்மத்தில் அடங்கும் என்றும் கொள்ளலாம். ஆகவே தானத்தை விட தர்மமே சிறந்தது.
SOURCE :DAILY THANTHI