கோயில் திருப்பணிகளை செய்ய விடாமல் தடுப்பதற்காக புதுப்புது விதிகளை உருவாக்கிய தி.மு.க.!
இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒரே பணியை பல பாகங்களாக பிரித்து உபயதாரர்கள் மூலமாக செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக உபயதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப சிறு சிறு திருப்பணிகளை செய்து கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே பணியை வகைப்படுத்தி பிரித்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய புதுப்புது விதிகளை உருவாக்கி திமுக அரசு முட்டுக்கட்டை போடுவதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்காக முதலில் கோயில் திருப்பணிகள் செய்யப்படும். இதற்கு என்று அரசு சார்பில் நிதி ஒதுக்கீஐ செய்யப்பட்டு, உபயதாரர்கள் மூலமாகவும் பணிகள் நடைபெறும். இந்த பணிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இது போன்ற பணிகளை செய்வதால் அவர்களுக்கு கவுரவமாகவும் பார்க்கின்றனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், இனி ஒரே பணியை பல பாகங்களாக பிரித்து உபயதாரர்கள் மூலமாக செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக உபயதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப சிறு சிறு திருப்பணிகளை செய்து கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே பணியை வகைப்படுத்தி பிரித்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்ட சில வகையிலான பணிக்கு கூடுதல் செலவு ஏற்படும்போது, அந்த வேலைக்கான பணத்தை இங்கே தூக்கிப்போடு. அந்த வேலையை கிடப்பில் போடு எனவும், திருப்பணிகளில் தொய்வு ஏற்படும். திருப்பணியை எந்த ஒப்பந்ததாரரும், உபயதாரரும் ஆர்வமுடன் இறை பணிகளை மேற்கொள்ள முடியாத வகையில் பல்வேறு விதிகளை திமுக அரசு உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக இந்து அமைப்பினர் கூறுகையில், அறநிலையத்துறையின் விதிகளை படித்து பார்த்தால் இனிமேல் யாரும் கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள முன்வர மாட்டார்கள். ஒவ்வொரு பணியை மேற்கொள்ள மதிப்பீடு அனுப்பும்போது அதனை குழு ஆய்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. நல்லதாக இருந்தாலும் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வெளியிட்டால் மதிபீட்டை மாற்றி மாற்றி அனுப்பும் பட்சத்தில் காலம்தான் கழியும்.
இதன் காரணமாக திருப்பணி செய்வதும் தள்ளிப்போகும். இதன் மூலம் கோயில் திருப்பணிக்கு திமுக அரசு வேண்டும் என்றே முட்டுக்கட்டை போட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றனர். மேலும், கோயில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் அறங்காவலரின் பங்கு மிக முக்கியது. எந்த ஒரு பணி என்றாலும் அறங்காவலர்களின் ஒப்புதல் அவசியம் ஆகும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கோயில்களில் இந்த குழுவை அமைக்க முந்தைய அதிமுக அரசும், தற்போது அமைந்துள்ள திமுக அரசும் ஆர்வம் செலுத்தவில்லை.