வானவில்லின் அறிவியல் தெரிந்த நமக்கு அதன் ஆன்மீகம் தெரியுமா?

Update: 2021-03-06 00:00 GMT

வானவில் என்பது மழைகளின் உள், சூரியவொளி ஊடுருவி அது பிளவுப்படுகிற போது நீர்த்துளிகளின் பின்பாக தெரியும் பிம்பம். பொதுவாக சூரியனுக்கு எதிர் திசையில் வானவில் தோன்றும்.

இதில் ஏழு வண்ணங்கள் இருப்பதும், அவை முறையே சிவப்பு, ஆரஞ்சு, இந்த நிறங்கள் ஒளிபிரதிபலிப்பால் உருவானது என்பதை கடந்து. இந்த வண்ணங்களுக்கு பின் சொல்லப்படும் ஆன்மீக கூறுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.



வானவில்லில் தெரிகிற ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொறு மொழியை பேசுகிறது. நீர்த்துளியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியானது தெய்வீக அம்சத்தை நமக்கு உணர்த்த நினைக்கிறது.

சிவப்பு நிறம் நம் மூலாதார சக்கரத்திற்கு உரிய நிறமாகும். இந்த நிறம் அன்பு ரெளத்திரம் இரண்டையும் குறிப்பதாக இருக்கிறது. இதை உணர்த்தும் விதத்தில் சூரிய கடவுளை ஞாயிற்று கிழமைகளில் சிவப்பு நிற மலர்களை அர்பணித்து வணங்குதல் வழக்கம். மங்களகரமான நிறங்களுள் ஒன்றாக கருதப்படும் சிவப்பு தேவி துர்கைக்கு உகந்த நிறமும் கூட. எனவே ஒருவர் உடலளவில், மனதளவில் பலம் பெற இந்த சக்ரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி தியானிக்கலாம்.

ஆரஞ்சு வண்ணம்துடிப்பு மிக்க ஆற்றல் நிறைந்த ஒரு வண்ணம். ஆரஞ்சு வண்ணம் பாசத்தின், நுட்பமான தன்மையின் அடையாளம். மேலும் இது நெருப்பை குறிக்கிறது. நம்மிடம் உள்ள அசுத்தங்களை துடைத்து நம்மை புனிதமாக உணரச் செய்கிறது. இது நம் சுவாதிஸ்டானம் சக்கரத்திற்கு உகந்தது .



மஞ்சள், மகிழ்ச்சியை, அமைதியை மனதின் திடத்தை பலப்படுத்துகிறது. மேலும் இது வியாழக்கிழமைக்கு உகந்த நிறமாக கருதப்படுகிறது. நம்பிக்கையின், தைரியத்தின் மனதின் உறுதியின் நிறம் மஞ்சள். ஞானத்தின் நிறம் மஞ்சள் இது மூன்றாம் சக்ரத்தின் நிறம். எனவே மனம் நம்பிக்கையை தேடுகிற போது மனதில் மணிப்பூரகம் சக்ரத்தை இருத்தி தியானிக்க வேண்டும்.

பச்சை நிறம் வாழ்வாதாரத்தின் நிறம். உயிர்ப்புடன் இருக்கும் தன்மையின் நிறம். இயற்கை, இயற்கை அழகை, சுற்றுப்புற சூழலை ஆரோக்கியத்தை உணர்த்தும் நிறம். இது அனாகத சக்ரத்தின் நிறம். எனவே தீர்வை நோக்கி தியானிக்கிற போது இந்த நிறத்தை சக்ரத்தை நினைவில் கொள்ளலாம்

கடலின், வானத்தின், நதியின் நிறம். மன அமைதியை, உறுதித் தன்மையை உணர்த்தும் நிறம் நீலம். இது நம் தொண்டையை உணர்த்தும் விசுத்தி சக்ரத்தை உணர்த்தும் நிறம்.

கருநீலம், பெளர்ணமி இரவின் நிறம் இது. இது நம் ஆழ்மனம், விரிந்த பிரபஞ்சத்தின் நிறம். ஆன்மீகத்தின் ஆழ்நிலையை நோக்கி செல்கிற ஆன்மீக சாதகர்களுக்கு உரிய சக்கரமான ஆக்ஞா சக்ரத்தின் நிறம். இது முழுமையான தெய்வீகத் தன்மை கொண்ட நிறம்.

ஊதா நிறம் ஆன்மீக பாதையின் நுழைவாயில் எனலாம். நம் ஆன்மா, உடல், உயிர் ஆகிய அனைத்தையும் குறிப்பது இது. விழிப்பு நிலையின், இறை அதிர்வுகளின் நிறமாக இருப்பதால் சகஸ்கரநாம சக்கரத்தை இந்நிறம் குறிக்கிறது.

Tags:    

Similar News