கண் திருஷ்டிகளில் இருந்து நம்மை காக்க வேண்டுமா? இந்த எளிய முறைகளை கடைப்பிடித்தால் போதும்?

கண் திருஷ்டிகளில் இருந்து நம்மை காக்க வேண்டுமா? இந்த எளிய முறைகளை கடைப்பிடித்தால் போதும்?

Update: 2021-02-13 07:09 GMT

திருஷ்டி என்கிற வார்த்தைக்கு கண் பார்வை என்று பொருள். மேலும் திருஷ்டி என்கிற வார்த்தை மிக குறிப்பாக, தீமையான கண்ணை குறிக்கிறது. யாரொருவர் ஒருவருக்கு தீமை நிகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருவரை பார்க்கிறாரோ அதை தீய கண் என்று அழைக்கிறோம்.

எங்கே தீய ஆற்றல் ஏவப்பட்டிருக்கிறதோ அங்கே நல்லாற்றல் குறைந்து மகிழ்ச்சி குறைய துவங்குகிறது. மகிழ்ச்சி குறைவதென்றால் அங்கே துக்கம் நிகழ வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒருவர் மனரீதியாக மிக பலவீனமாக உணருவதையே நாம் தீய ஆற்றல் என்கிறோம்.

சில சமயங்களில் மனம் சோர்வாக, தனிமையாக, தூக்கமின்மை மற்றும் கெட்ட கனவுகள் போன்றவை தீமையான கண் திருஷ்டி நம் பதிந்ததன் அடையாளமாகும். எங்கே ஒருவர் மனதில் உறுதியான கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, யாரொருவர் தியானம் மற்றும் ஆன்மீக சதானக்களில் ஈடுபட்டுள்ளார்களோ அவர்களின் ஆரா பலமானதாக இருக்கும். ஆன்மீக பாதையில் இருப்பவர்களை தீய திருஷ்டி எதுவும் செய்வதில்லை.

எப்போது இறையின் மீது, உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ அங்கே தீய ஆற்றல்கள் உங்களை தாக்க துவங்கும். இருப்பினும், தீய திருஷ்டியிலிருந்து தப்பிக்க நாம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கே உங்கள் செல்வத்தை எல்லோரிடமும் வெளிச்சம் போட்டு காட்டாதீர்கள். எளிமையாக சொன்னால், உங்களை குறித்து நீங்களே சுய தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்கள் பண திட்டமிடல்களை, பண ரீதியான கணக்கு வழக்குகளை யாரின் முன்பும் வெளிப்படுத்தாதீர்கள்.

வெளியாட்கள் முன்பு உணவு உண்பதை தவிருங்கள். காரணம், முகம் தெரியாதவர்கள் ஒரு வேளை பசியில் இருப்பதை அறியாம நீங்கள் உண்டால் அவர்களின் பார்வை திருஷ்டியாக மாறக்கூடும். மற்றும் நீங்கள் உண்ணும் அளவினை கண்டு அவர்கள் வியப்பதும் ஒரு வித தீமையான ஆற்றலை உருவாக்கும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டுவதை தவிருங்கள். காரணம், குழந்தைகளின் ஆரா மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்பதால் அது அவர்களை எளிதில் தாக்கக்கூடும்.  குழந்தைகளின் அறிவு மற்றும் புத்திசாலித்தனமான நடத்தைகளை அனைவரின் முன்பும் புகழாதீர்கள்.

வீடு, நாம் இருக்கும் இடம், மற்றும் நம்மை சுற்றியுள்ள பொருட்களை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். எப்போதும் நம்மை சுற்றி நல்ல இசை, நல்ல சூழல் மற்றும் நல்ல ஆற்றலை வைத்து கொள்வது நம் நல்வாழ்விற்கும் தீய திருஷ்டியிலிருந்து தப்பவும்  உதவும்.

Similar News