ஆண்டாள் கையில் கிளி எதனால் தெரியுமா?
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கையில் கிளி ஒன்று இருக்கும். அதற்கான புராண கதை பற்றிய தகவலை அறிவோம்.
கண்ணனை விரும்பிய ஆண்டாள் அந்த தகவலை கண்ணனுக்கு தெரிவிப்பதற்காக கிளியை தூதாக அனுப்பினாராம். அந்த கிளியும் அதுபோலவே தூது சென்றதாம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் தன்னுடைய கரத்தில் கிளியை தாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
மரவள்ளி கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பழத்தைக் கொண்டு அலகும், இலையால் இறகுகளும், காக்கா பொன் கொண்டு கண்களும் செய்கிறார்கள். இவை அனைத்தும் வாழை நாரினால் இணைத்து கிளி தயாரிக்கப்படுகிறது. தினமும் தயார் செய்யப்படும் கிளியானது மாலை நேர பூஜையின் போது ஆண்டாளின் கரத்தில் வைக்கப்படும். மறுநாள் காலை வரை ஆண்டாளின் கரத்தில் இருக்கும் இந்த கிளி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.