சகல தோஷம் நீக்கும் ஏரிக்குப்பம் யந்திர சனி பகவான்
நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் சனி பகவான் எனவே அவருக்கு 'நீதிமான்' என்ற சிறப்பு பெயரும் உண்டு.
ஒருவருக்கு கண்டகச் சனி, ஏழரைச் சனி அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும் போது நவகிரக ஹோமம் செய்வதுடன் சனி பகவானுக்கு பரிகாரமும் செய்வது அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும் போது சிவபெருமானை பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சீதைக்கு ஜென்மத்தில் சனி இருந்த போது தான் ராவணன் இலங்கைக்கு அவரை கவர்ந்து கொண்டு போனான். அரிச்சந்திரனும் நலனும் அஷ்டமத்தில் சனி இருந்து ஆட்டிப்படைத்த போது தான் நாடு, மனைவி, மக்கள் என சகலத்தையும் இழந்து நிர்கதியாக நின்றார்கள். என்றெல்லாம் புராணங்கள் எடுத்து இருக்கின்றன.
ஆனாலும் இவ்வளவு துன்பங்களை தருபவராக இருந்தாலும் சனி பகவான் இளகிய மனம் படைத்தவர் சனி பகவான். ஒவ்வொரு ராசியும் உயிர் வாழ்வதற்கு காரணமான ஜீவநாடி ஆகும். எனவேதான் சனிபகவான் ஆயுள்காரகன் எனவும் அழைக்கப்படுகிறார் . இப்படிப்பட்ட சனிபகவான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் கோவிலில் எந்திர வடிவில் அமைந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். அவருடன் அவரது அண்ணி சாயாதேவியும் எந்திர வடிவில் அருள்பாலிக்கிறார்.
தாய் அருகில் இருப்பதால் சனி பகவான் எப்போதுமே சாந்தமாகவே இருப்பார். இந்த சனி பகவான் எந்திர வடிவில் ஐந்தடி உயரம் இரண்டரை அடி அகலம் கொண்டு அருங்கோன வடிவத்தில் அமைந்துள்ளார். அதன் ஆறு முனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. எந்திர சிலையின் மேல் பக்கம் தென்புறமாக சூரியனும் நடுவில் ஸ்ரீ சனி பகவானின் வாகனமான காகத்தின் உருவமும் வலப்புறமாக சந்திரனும் உள்ளனர்.